சைக்கிளை ஓட்டும்போது பாதுகாப்பு தலைக் கவசத்தை பயன்படுத்த வேண்டும்

சைக்கிள் ஓட்டுபவர்கள் பாதுகாப்பு தலைக்கவசம் அணிவது சிறந்தது என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் போக்குவரத்து மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளர் நாயகம் பிரதி பொலிஸ் மா அதிபர் இந்திக்க ஹப்புகொட இரவு நேரத்தில் சைக்கிளில் பயணிக்கும்போது எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கைகள் விளக்கமளித்தார்..

ஒரு மிதிவண்டியின் அடிப்படை அங்கமாக இரவில் பிரதான பிரதான மின் குமிழ் (head lights) பிரதான குமிழ் வேண்டும். மேலும் மிதிவண்டியின் பின்புறத்தில் ஒரு பிரதிபலிப்பு மின் குமிழ் இருக்க வேண்டும்.

மேலும் அவசர நேரத்தில் மிதிவண்டியை நிறுத்துவதற்கு பிரேக் பொருத்தப்பட வேண்டும்.

மோட்டார் வாகனச் சட்டத்திற்கு அமைய, மிதிவண்டியும் வீதியில் பயணிக்கும் ஏனைய வாகனங்களுக்குச் சமனானது. எனவே பாதையின் இடது பக்கத்தில் பயணிக்க வேண்டும்

மேலும், இரவில் சைக்கிளில் பயணிக்கும்போது, இருளிலும் தெளிவாக விளங்கக் கூடிய ஆடைகளை அணிவது சிறந்தது.

அத்துடன், மிதிவண்டியை திருப்பும்போது பாதை ஒழுங்கு விதிகளை கடைபிடித்து கவனமாக பயணிக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.