தங்கம் விலையானது சமீபத்திய காலமாக மிகப்பெரிய அளவில் மாற்றமின்றி ரேஞ்ச் பவுண்டாகவே இருந்து வருகின்றது. தங்கம் விலை குறையாவிட்டாலு, அதிகரிக்காமல் இருப்பதே மிகப்பெரிய ஆறுதலான விஷயமாகவும் பார்க்கப்படுகிறது.
எனினும் ஆபரணத் தங்கத்திற்கான தேவையானது மிகப்பெரிய அளவில் உயர்ந்து வருகின்றது.
ஜூலை 1 முதல்.. 3 முக்கிய வருமான வரி மாற்றங்கள்.. உஷாரா இருங்க!
கொரோனா காலத்தின் நின்று போன்ற திருமண விழாக்கள் என அனைத்தும் களை கட்டத் தொடங்கி விட்டன.
வர்த்தக பற்றாக்குறை அதிகரிப்பு
இதனால் தங்கத்திற்கான தேவையானது மிகப்பெரிய அளவில் அதிகரித்து வருகின்றது. ஏற்கனவே பணவீக்கத்தின் மத்தியில் வர்த்தக பற்றாக்குறை என்பது மிகப்பெரிய அளவில் அதிகரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக கச்சா எண்ணெய் விலையேற்றம் காரணமாக மிகப்பெரிய அளவில் வர்த்தக பற்றாக்குறையானது அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இறக்குமதி வரி அதிகரிப்பு
ஆக இப்படி ஒரு நெருக்கடியான நிலைக்கு மத்தியில் மத்திய அரசு இறக்குமதியினை கட்டுக்குள் வைக்கவும், வர்த்தக பற்றாக்குறையை குறைக்கவும் திட்டமிட்டிருக்கலாம். இதன் காரணமாக தங்கத்தின் மீதான இறக்குமதி வரி விகிதமானது 5% அதிகரித்துள்ளது. இது தற்போது 7.5%ல் இருந்து, 12.5% ஆக அதிகரித்துள்ளது.
விலை அதிகரிக்கலாம்
ஏற்கனவே உள் நாட்டு நிபுணர்கள் முதல் சர்வதேச அளவிலான தரகு நிறுவனம் வரையில் தங்கம் விலை அதிகரிக்கலாம் என்று கணித்து வருகின்றனர். குறிப்பாக பணவீக்கம், உக்ரைன் ரஷ்யா இடையேயான பிரச்சனை, கொரோனா அச்சம், தங்கத்தின் தேவை, ரெசசன் அச்சம் என பல காரணிகளும் தங்கத்திற்கு ஆதாரவாக உள்ளன. இதற்கிடையில் உள்நாட்டில் தற்போது வரியும் அதிகரிக்கப்பட்டுள்ளது மேலும் தங்கம் விலையினை ஊக்குவிக்கலாம். இதோடு தொடர்ந்து இந்திய ரூபாயின் மதிப்பும் சரிவினைக் கண்டு வருகின்றது. ஆக இது தங்கம் விலை அதிகரிக்க காரணமாக அமையலாம்.
இறக்குமதி குறையும்
கடந்த மே மாதத்தில் இந்தியா மொத்தம் 107 டன் தங்கத்தினை இறக்குமதி செய்துள்ளது. இதே அளவு ஜூன் மாதத்திலும் இருக்கலாம் என்ரு எதிர்பார்க்கப்படுகிறது. ஆக தற்போது நிலவி வரும் அசாதாரண சூழலில் பணவீக்கத்துடன், வர்த்தக பற்றாக்குறையை மேலும் இது தூண்டலாம். இது மேற்கொண்டு கரன்சி மதிப்பு சரிய காரணமாக அமையலாம்.
வர்த்தக பற்றாகுறை
கடந்தே மே மாதத்தில் வர்த்தக பற்றாக்குறை 24.29 பில்லியன் டாலர் அளவுக்கு அதிகரித்தது. மே மாதத்தில் இந்தியா 6.03 பில்லியன் டாலர் அளவுக்கு தங்கத்தினை இறக்குமதி செய்துள்ளது. இது கடந்த ஆண்டினை காட்டிலும் 9 மடங்கு அதிகமாகும். ஆக இப்படி பல பிரச்சனைகளுக்கு மத்தியில் தான் மத்திய அரசு இப்படி ஒரு முடிவினை எடுத்திருக்கலாம். இது தங்கம் விலையினை அதிகரிக்க தூண்டலாம் என்பதால், மக்கள் வாங்குவது குறையலாம். இறக்குமதியும் குறையலாம்.
நடப்பு ஆண்டின் பட்ஜெட்டில் இறக்குமதி வரியானது 7.5% ஆக குறைப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Gold import duty has been increased from 7.5% to 12.5%
Gold import duty has been increased from 7.5% to 12.5%/தங்கம் ஆர்வலர்கள் பெரும் ஷாக்.. இறக்குமதி 5% அதிகரிப்பு.. இனி விலை என்னவாகும்