தஞ்சாவூரிலிருந்து திருடப்பட்ட 300 ஆண்டுகள் பழமைவாய்ந்த முதல் தமிழ் பைபிள் லண்டனில் இருப்பதை தமிழக காவல் துறை உறுதி செய்துள்ளது.
1706 ஆம் ஆண்டு நாகை வந்த, ஜெர்மன் மத போதகர் சீகன் பால், தரங்கம்பாடியில் முதல் அச்சகத்தை நிறுவி, புதிய ஏற்பாட்டை தமிழில் மொழிமாற்றம் செய்து, முதலில் அச்சடித்தார்.
தஞ்சை சரஸ்வதி நூலகத்திலிருந்து அந்த பழமையான பைபிள் 2005 ஆம் ஆண்டு காணாமல் போனதாக புகார் எழுந்த நிலையில், லண்டனில் உள்ள கிங்ஸ் கலெக்சன் என்ற நிறுவனத்தில் இருப்பதை தமிழக சிலைத் தடுப்பு காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
யுனெஸ்கோ ஒப்பந்தத்தின்படி அதை இந்தியா கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.