சென்னை: தமிழ்நாடு முழுவதும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் ஆய்வு மேற்கொள்ள 20 அதிகாரிகளை நியமனம் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஜூலை 31-க்குள் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களையும் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் ஆணைபிறப்பிக்கப்பட்டுள்ளது.
