தரையிறங்காமல் பல ஆண்டுகள் பறக்குமா? உலகின் முதல் அணுசக்தி பறக்கும் ஹோட்டல்!

ஹோட்டல்களை தரையில் பார்த்திருக்கிறோம், தண்ணீரில் பார்த்திருக்கிறோம், சொகுசு கப்பலில் கூட பார்த்திருக்கிறோம், ஆனால் விமானத்தில் பார்த்ததுண்டா?

உலகின் மிகப்பெரிய பறக்கும் விமான ஹோட்டல் ஒன்றின் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த பறக்கும் ஹோட்டல் அணு சக்தியால் இயங்குகிறது என்பது சிறப்புக்குரிய அம்சமாகும்.

ரூ.400 கோடிக்கு வீடு, 3 விமானம், ஏகப்பட்ட கார்.. ராஜ வாழ்க்கை வாழும் கௌதம் அதானி..!

பறக்கும் ஹோட்டல்

பறக்கும் ஹோட்டல்

உலகின் மிகப்பெரிய அணுசக்தியால் இயங்கும் பறக்கும் ஹோட்டல் கொண்ட AI- பைலட் விமானம் குறித்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. சுமார் 5000 பேர்களை ஏற்றிக்கொண்டு தரை இறங்காமல் பல ஆண்டுகள் இந்த விமானத்தில் பறக்க முடியும் என்பது கூடுதல் சிறப்பு.

ஸ்கை குரூஸ்

ஸ்கை குரூஸ்

ஒரு நீண்ட விடுமுறையை விரும்புபவர்கள் இந்த விமானத்தில் பயணம் செய்வது சரியாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஸ்கை குரூஸ் என்று கூறப்படும் இந்த பறக்கும் ஹோட்டல் சுற்றுப் பயணிகளை ஒரு சிறந்த அனுபவத்திற்கு அழைத்து செல்கிறது.

 ஆடம்பர வசதி
 

ஆடம்பர வசதி

பயணிகள் கப்பலில் இருக்கும் ஆடம்பர நட்சத்திர ஹோட்டல் போல இந்த பறக்கும் ஹோட்டலில் அனைத்து விதமான ஆடம்பர வசதிகளும் உள்ளது. குறிப்பாக உணவகங்கள், மருத்துவ வசதிகள், திருமண மண்டபம் போன்ற மிகப் பெரிய ஹால்கள் உள்ளிட்டவை இந்த விமானத்தில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அனிமேஷன் வீடியோ

இந்த பறக்கும் விமானம் குறித்த அனிமேஷன் வீடியோ ஒன்றை ஹஷேம் அல்-கைலி என்பவர் தனது யூடியூப் சேனலில் பகிர்ந்துள்ளார். எதிர்காலத்தில் பயன்படுத்தப்படும் ஹோட்டல் என்ற இந்த ஸ்கை க்ரூஸ் பறக்கும் ஹோட்டலின் விமான வடிவமைப்பு அனிமேஷனை டோனி ஹோம்ஸ்டன் என்பவர் உருவாக்கியுள்ளார். இவர் திரைப்படங்கள் மற்றும் அனிமேஷன் படங்களில் தனது திறமையை வெளிப்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

லட்சக்கணக்கில் பார்வையாளர்கள்

லட்சக்கணக்கில் பார்வையாளர்கள்

ஒரு சில நாட்களுக்கு முன்னர் வெளியான இந்த வீடியோவை லட்சக்கணக்கானோர் பார்வையிட்டு உள்ளனர் என்பதும் இதற்கு ஏராளமான பாசிட்டிவ் கமெண்ட்ஸ்களும், ஒரு சில நெகட்டிவ் கமெண்ட்ஸ்களும் பதிவாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

சந்தேகங்கள்

சந்தேகங்கள்

இந்த பறக்கும் ஹோட்டல் குறித்து பல சந்தேகங்களையும் பார்வையாளர்கள் எழுப்பியுள்ளனர். பல ஆண்டுகளாக தரை இறங்காமல் பறக்கக்கூடிய அணுசக்தியால் இயங்கும் இந்த பறக்கும் ஹோட்டல் உண்மையிலேயே ஒரு பிரமிப்பான விஷயம் தான் என்பது தான் பலரது கருத்துக்களாக உள்ளது.

கற்பனை விமானங்கள்

கற்பனை விமானங்கள்

காமிக்ஸ் திரைப்படங்களில் பார்த்த கற்பனை விமானங்களை நினைவூட்டுவதாக பலர் கருத்து தெரிவித்துள்ளனர். ஸ்டார் வார்ஸ், மார்வெல் படங்களில் இருக்கும் விமானங்களுக்கு இணையாக இந்த விமானத்தை பலர் ஒப்பீடு செய்து வருகின்றனர்.

மிகச்சிறந்த பொழுதுபோக்கு

மிகச்சிறந்த பொழுதுபோக்கு

உலகின் மிகப் பெரிய பணக்காரர்களுக்கு மிகச்சிறந்த பொழுதுபோக்காக இந்த பறக்கும் ஹோட்டல் இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஓட்டல் விரைவில் சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டுக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

World’s largest flying hotel by Nuclear-power takes internet by storm

World’s largest flying hotel by Nuclear-power takes internet by storm |தரையிறங்காமல் பல ஆண்டுகள் பறக்குமா? உலகின் முதல் அணுசக்தி பறக்கும் ஹோட்டல்!

Story first published: Friday, July 1, 2022, 11:04 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.