புதிய குடியரசு தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் ஜூலை 18-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூலை 21-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி பாஜக சார்பில் திரவுபதி முர்மு குடியரசு தலைவர் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார்.
வேட்பாளர் திரௌபதி முர்முவை சர்க்கஸ் புலி என்று திருமாவளவன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். மேலும், காட்டு யானை போல அல்லாமல், பாகன் கையில் சிக்கிய யானை போல பாஜக சொல்லும் திட்டங்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து கையெழுத்து இடுபவர் யென்றும் விமர்சனம் செய்துள்ளார்.
இந்நிலையில், திருமாவளவனுக்கு, தமிழ் திரைப்பட நடிகையும், பாஜக பிரமுகருமான காயத்திரி ரகுராம் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார். அதில்,
“பழங்குடி சமூகத் தலைவரை, பெண் தலைவரை கேலி செய்வது வெட்கக்கேடானது.
திரு. திருமா, திராவிட மாடல் படி நீங்கள் பிளாஸ்டிக் நாற்காலி பூனைக்குட்டியா?
மறக்க வேண்டாம். முதன்முறையாக பழங்குடியினர், புறக்கணிக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் இந்திய குடியரசுத் தலைவராகப் பதவியேற்க உள்ளார்.
சமூக நீதியை ஆதரிப்பதற்கு பதிலாக சர்க்கஸ் பற்றி பேசுகிறார்களா?” என்று தெரிவித்துள்ளார்.
பழங்குடி சமூகத் தலைவரை, பெண் தலைவரை கேலி செய்வது வெட்கக்கேடானது.
திரு. திருமா, திராவிட மாடல் படி நீங்கள் பிளாஸ்டிக் நாற்காலி பூனைக்குட்டியா? மறக்க வேண்டாம். pic.twitter.com/gqQQS42JDC
— Gayathri Raguramm 🇮🇳🚩 (@BJP_Gayathri_R) July 1, 2022