புதுடெல்லி: தொழில் தொடங்குவதற்கு மிகவும் இணக்கமான சூழல் நிலவும் மாநிலங்கள் வரிசையில் முதலிடத்தில் ஆந்திரா உள்ளது. குஜராத் மற்றும் தெலங்கானா மாநிலங்கள் இரண்டாவது மற்றும் மூன்றாமிடங்களைப் பிடித்துள்ளன.
மத்திய நிதி அமைச்சர் வெளியிட்ட இந்த பட்டியலில் இமாச்சல் (4), உ.பி. (5), ஒடிசா (6), ம.பி. (7) ஆகிய மாநிலங்கள் இடம்பிடித்துள்ளன. வளர்ச்சி வாய்ப்புள்ள மாநிலங்கள் வரிசையில் அசாம் (8), கேரளா (9), கோவா (10) ஆகியன உள்ளன.
இந்த வரிசையில் முதல் 10 இடங்களுக்குள் தமிழ்நாடு இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வளரும் தொழில் வாய்ப்பு, அதற்குரிய சூழல் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 11 இடம்பிடித்துள்ளன. இதில் டெல்லி, புதுச்சேரி, திரிபுரா ஆகியனவும் அடங்கும்.