தெப்பகாடு – மசினகுடி சாலையின் நடுவே நின்ற காட்டு யானையால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம் முதுமலை வனபகுதிக்குள் உள்ள தெப்பக்காட்டில் இருந்து மசினகுடி பகுதிக்கு செல்ல வனப்பகுதி வழியாக சாலை உள்ளது. இந்த சாலை ஊட்டியிலிருந்து கர்நாடக மாநிலத்தை இணைக்கக்கூடிய முக்கிய சாலையாகும்.
இந்த நிலையில் நேற்றிரவு சாலை ஓரத்தில் மேய்ந்து கொண்டிருந்த காட்டு யானை திடீரென சாலையின் நடுவே வந்து நின்றது. யானை நின்றதைக் கண்ட வாகன ஓட்டிகள் சாலையின் இருபுறங்களிலும் வாகனத்தை நிறுத்தி யானையை தொந்தரவு செய்யாமல் காத்திருந்தனர்.
இதையடுத்து சுமார் ஒருமணி நேரத்திற்கு பிறகு தானாக சாலையில் இருந்து நகர்ந்து வனப்பகுதிக்குள் சென்று நின்றது. அதனைத் தொடர்ந்து வாகன ஓட்டிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இதனால், இந்த சாலையின் நடுவே நின்ற காட்டு யானையால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM