நாம் பல வித கூட்டு, சாம்பார் என்று இட்லி தோசைக்கு பலவிதமான சைடிஷ் செய்தாலும் இந்த சட்னி போல் வருவதில்லை. இந்திய சமையலில் சட்னிக்கு தனி இடம் இருக்கிறது. ஒவ்வொரு வீட்டிலும் சட்னியை வித்தியாசமாக செய்வார்கள். தேங்காய், பொதினா, வேர்கடலை, கொத்தமல்லி, மாங்காய் என்று பல வித சட்னிகள் இருக்கிறது. இதில் நாம் வெங்காயச் சட்னிதான் எப்படி செய்வது என்றுதான் பார்க்க போகிறோம்.
தேவையான பொருட்கள்
கடலை பருப்பு, எண்ணெய், உளுத்தம் பருப்பு, தனியா, வெந்தயம், கருவேப்பில்லை, பூண்டு, வெங்காயம், பெருஞ்சீரகம், கருங்சீரகம்.
செய்முறை
அடுப்பில் வைத்த பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அதில் கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு, ஜீரகம், தனியா, வெந்தயம் , கருவேப்பில்லை, பூண்டு, நறுக்கிய வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும். பொன்னிறமாக மாறியதும், இதில் சிவப்பு மிளகாய் சேர்க்கவும். நன்கு வறுபட்டதும், இதில் உப்பு மற்றும் புலி ஆகியவற்றை சேர்க்கவும். அடுப்பை அணைத்துவிட்டு சூடு குறைந்ததும் .இந்த கலவையை மிக்ஸியில் போட்டு அரைக்கவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு, பெஞ்சீரகம். கருஞ்சீரகம் , பெருங்காயம், கருவேப்பில்லை, காஷ்மீரி மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் சேர்த்து கிளரவும். தற்போது இந்த தாளிப்பை அரைத்து வைத்திருந்த விழுதில் கலக்கவும். சூப்பரான வெங்காயச் சட்னி ரெடி.