திருவனந்தபுரம்-கேரளாவை சேர்ந்த இளம்பெண், நியூசிலாந்து நாட்டில் போலீஸ் வேலைக்கு தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.
கேரளாவைச் சேர்ந்த அபிலாஷ் செபாஸ்டியனின் மகள் அலீனா, ஆறாம் வகுப்பு வரை கேரளாவில் படித்தார்.அப்போது, அவரது தந்தைக்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடான நியூசிலாந்தில் வேலை கிடைத்தது. இதையடுத்து, அவர் குடும்பத்துடன் அங்கு சென்று விட, அலீனா ஏழாம் வகுப்பில் இருந்து நியூசிலாந்தில் படித்தார்.
அங்கு, ஒடாகோ பல்கலையில் ‘சைக்காலஜி’ மற்றும் ‘கிரிமினாலஜி’ பாடங்களில் பட்டம் பெற்ற பின், ராயல் நியூசிலாந்து போலீஸ் பயிற்சி கல்லுாரியில் படித்து பட்டம் பெற்றார். அடுத்து, போலீஸ் பணிக்கான தேர்வு எழுதி தேர்ச்சி அடைந்தார்.
இந்நிலையில், அலீனா, ஆக்லாந்து நகரில் கான்ஸ்டபிளாக நியமிக்கப்பட்டுள்ளார். நியூசிலாந்து போலீஸ் பணியில் சேரும் கேரளாவின் முதல் பெண் அலீனாவுக்கு, கேரள மக்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
திருவனந்தபுரம்-கேரளாவை சேர்ந்த இளம்பெண், நியூசிலாந்து நாட்டில் போலீஸ் வேலைக்கு தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.nsimg3066954nsimg கேரளாவைச் சேர்ந்த அபிலாஷ் செபாஸ்டியனின் மகள் அலீனா, ஆறாம் வகுப்பு
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.