நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் இருந்து கொழும்பு மெனிக் சந்தை உட்பட ஏனைய மாகாணங்களிலுள்ள பொருளாதார நிலையங்களுக்கு நாளாந்தம் மரக்கறி கொண்டும் செல்லும் வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளது.
இதற்கான விசேட வேலைத்திட்டத்தின் கீழ் நுவரெலியாவில் சிங்க ஜெரிமென்ட் இராணுவ முகாமில் குறித்த வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளது.
இந்த நடவடிக்கை இன்று முதல் அமுலுக்கு வந்துள்ளது. நுவரெலிய பொருளாதார மத்திய நிலையத்தினால் லொறிகளின் விபரம் இராணுவ முகாமிற்கு வழங்கப்பட்டிருப்பதாக நுவரெலிய மாவட்ட செயலாளர் நந்தன கலகொட கூறினார்.
இதேவேளை நுவரெலியாவின் பல பிரதேசங்களிலுமுள்ள மரக்கறி செய்கையாளர்கள் தமது அறுவடைகளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு கொண்டு வருவதற்காக, அந்த வாகனங்களுக்கும் இராணுவ முகாமில் எரிபொருள் விநியோகிக்கப்படும்.