உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவராக மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் தனது பழைய ரெஸ்யூம் ஒன்றை பகிர்ந்துள்ள நிலையில் அது தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.
ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் அவர்களது ரெஸ்யூம் என்பது மிகவும் முக்கியமானது. அவர்களது தகுதிகள், அனுபவம் மற்றும் திறமைகளை குறிக்கும் ஒரு பிரதிபலிப்பாகவே ரெஸ்யூம் கருதப்படுகிறது.
ஜூலை 1 முதல்.. 3 முக்கிய வருமான வரி மாற்றங்கள்.. உஷாரா இருங்க!
இன்றைய நெருக்கடியான வேலைவாய்ப்பு துறையில் ரெஸ்யூம் என்பது ஒரு திறமையானவரை கண்டறிவதற்கான முக்கிய காரணிகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

ரெஸ்யூம்
ரெஸ்யூம் என்பது வெறும் ஆவணம் அல்ல, அது வாழ்க்கையை மாற்றும் ஒரு அங்கமாககூட இருக்கலாம். பல ஆண்டுகளாக படித்த படிப்பு, பெற்ற அனுபவம் மற்றும் திறமைகள் ஆகியவை அந்த ரெஸ்யூம் குறிப்பிடப்பட்டு இருக்கும் என்பதும் ஒரு ரெஸ்யூமை பார்த்தவுடனே அந்த நபருக்கு வேலை வழங்க வேண்டும் என்ற ஒரு எண்ணத்தை அந்த ரெஸ்யூம் உருவாக்கவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

பில்கேட்ஸ் ரெஸ்யூம்
அந்த வகையில் உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான பில்கேட்ஸ் 48 ஆண்டுகளுக்கு முன்னர் தான் தயாரித்த ரெஸ்யூமை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ள நிலையில் தற்போது அந்த ரெஸ்யூம் மில்லியன் கணக்கான இளைஞர்களுக்கு ஒரு பெரிய வரப்பிரசாதமாக உள்ளது. 66 வயதான பில்கேட்ஸ் தனது 18 ஆவது வயதில் இந்த ரெஸ்யூமை வடிவமைத்துள்ளார். அந்த ரெஸ்யூம் மிகச்சிறந்ததாக கருதப்பட்டு பலரால் பகிரப்பட்டு வருகிறது.

பில்கேட்ஸ் கல்வித்தகுதி-அனுபவம்
பில்கேட்ஸ் தனது ரெஸ்யூமில் வில்லியம் எச் கேட்ஸ் என்ற பெயரில் அமைத்துள்ளார். அவர் இந்த ரெஸ்யூமை ஹார்வர்ட் கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் போது உருவாக்கப்பட்டதாக அதில் அவர் தெரிவித்துளார். மேலும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் அமைப்பு, டேட்டாபேஸ் மேனேஜ்மென்ட், கம்பைலர் கன்ஸ்ட்ரக்ஷன் மற்றும் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் போன்ற படிப்புகளை படித்ததாக அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கம்யூட்டர் மொழிகள்
மேலும் FORTRAN, COBOL, ALGOL, BASIC, போன்ற அனைத்து முக்கிய கம்ப்யூட்டர் மொழிகளிலும் தனக்கு அனுபவம் இருப்பதாக பில்கேட்ஸ் தனது ரெஸ்யூமில் கூறியுள்ளார். மேலும் கடந்த 1973ஆம் ஆண்டு TRW சிஸ்டம்ஸ் குழுமத்தில் கணினி புரோகிராமராக இருந்த அனுபவத்தையும் அவர் கூறியுள்ளார். பில்கேட்ஸ் 1972ஆம் ஆண்டு சியாட்டிலில் உள்ள லேக்சைட் பள்ளியில் இணைத் தலைவர் மற்றும் இணை பங்குதாரராக இருந்த தனது பணியையும் பகிர்ந்து கொண்டார்.

இனிமையான அனுபவம்
தற்போது இந்த ரெஸ்யூம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் பில்கேஸ் இந்த ரெஸ்யூமை பகிர்ந்ததற்கு மிகவும் நன்றி என்றும் ஒரு அருமையான ரெஸ்யூமை பார்க்கும் அனுபவம் கிடைத்தது என்றும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். நாம் வாழ்க்கையில் எவ்வளவோ சாதித்து இருந்தாலும், நமது பழைய ரெஸ்யூமை பார்க்கும் மலரும் நினைவுகளால் கிடைக்கும் இனிமையான அனுபவமே தனி தான் என்றும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Bill Gates shares his résumé from 1974 in his 18th age!
Bill Gates shares his résumé from 1974 in his 18th age| 48 ஆண்டுகளுக்கு முந்தைய பில்கேட்ஸ் ரெஸ்யூம்.. அசந்துபோன நெட்டிசன்கள்!