ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடைவிதிக்கும் இந்தியாவின் நடவடிக்கையை, நார்வேயும், டென்மார்க்கும் பாராட்டியுள்ளன.
இந்தியாவின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது என்றும், மிக முக்கியமான நடவடிக்கையை பிரதமர் நரேந்திர மோடி எடுத்துள்ளதாகவும் நார்வே புகழாரம் சூட்டியுள்ளது.
இதேபோல்,டெல்லியில் இதுகுறித்து கருத்து தெரிவித்த இந்தியாவுக்கான டென்மார்க் தூதர் ஃப்ரெட்டி ஸ்வானே, இந்தியாவின் இந்த நடவடிக்கை மிகசிறப்பானது என்றும் பூமிக்கு இந்தியா அளிக்கும் பரிசு என்றும் பாராட்டியுள்ளார்.