வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மணிப்பூர் நிலச்சரிவில் பலியானோர் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது; 23 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.வடகிழக்கு மாநிலமான மணிப்பூரின் நோனி மாவட்டத்தில், ரயில்வே ‘யார்டு’ அமைக்கும் பணி நடக்கிறது. இதன் அருகில் ராணுவ முகாம் ஒன்று உள்ளது.
இங்கு நேற்று முன் தினம் பெய்த கனமழையால், பணி நடக்கும் இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது.இதில் சிக்கி இறந்த ராணுவ வீரர்கள் மற்றும் தொழிலாளர்களின் 20 உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன.மேலும் 55 பேரை தேடும் பணி தீவிரமாக நடக்கிறது. நேற்று வரை 23 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படை, அசாம் ரைபிள்ஸ் படை ஆகியவற்றுடன் ராணுவ வீரர்களும் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.இந்த விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு தலா 5 லட்சம் ரூபாயும், காயம் அடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் பைரேன் சிங் அறிவித்துள்ளார்.
Advertisement