மணிப்பூர் மாநிலம் நோனி மாவட்டத்தில் மண் சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களில் இதுவரை 20 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
துபுல் யார்டு ரயில்வே கட்டுமான தளத்திற்கு அருகில் உள்ள பிராந்திய இராணுவ முகாமில், கனமழை காரணமாக கடந்த 29 ஆம் தேதி இரவு நிலச்சரிவு ஏற்பட்டது. அங்கு ராணுவம், அசாம் ரைபிள்ஸ், மத்திய, மாநில பேரிடர் மீட்பு படையினர் இணைந்து 2வது நாளாக மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுவரை 18 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். 15 ராணுவ வீரர்கள் மற்றும் தொழிலாளர்கள் 5 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும் 15 ராணுவ வீரர்கள் உள்பட 44 பேரை காணவில்லை என்பதால் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.