மதகுரு மாநாட்டில் ஆப்கன் தலைவர்| Dinamalar

காபூல்:ஆப்கானிஸ்தானில் முஸ்லிம் மத தலைவர்கள்பங்கேற்கும் கூட்டத்தில் அந்நாட்டின் தலைவர் ஹிபத்துல்லா அகுந்த்ஸதா பங்கேற்றார்.
ஆப்கானிஸ்தானின் ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் கடந்த ஆகஸ்டில்கைப்பற்றினர். தலிபான்கள் படையை சேர்ந்த ஹிபத்துல்லா அகுந்த்ஸதா அந்நாட்டின் தலைவராக பொறுப்பேற்றார்.அதுமுதல் எந்த பொது நிகழ்ச்சியிலும் பங்கேற்கவில்லை.

அவரது புகைப்படம் ‘வீடியோ’ கூட பார்வைக்கு வெளியிடப்படவில்லை.இந்நிலையில் முஸ்லிம்மத தலைவர்களின் மூன்று நாள் மாநாடு காபூலில் நடக்கிறது. இதில் 3000க்கும் மேற்பட்ட மத தலைவர்கள் பங்கேற்கின்றனர்.மாநாட்டில் ஹிபத்துல்லா அகுந்த்ஸதா நேற்று பங்கேற்றார். அரங்கத்துக்கு அவர் வருகை தந்தபோது அங்கு குழுமியிருந்த மத தலைவர்கள் ஆரவாரம் செய்தனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.