வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி-மத்திய அரசுப்பணியில் உள்ள மூன்று முக்கிய பிரிவுகளை சேர்ந்த 8,089 ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
மத்திய செயலக நிர்வாகத்தின் முதுகெலும்பாக, மத்திய செயலக சேவை, மத்திய செயலக சுருக்கெழுத்தாளர் சேவை, மத்திய செயலக எழுத்தர் சேவை ஆகிய பிரிவுகள் உள்ளன.இந்த மூன்று பிரிவுகளைச் சேர்ந்த, 8,089 ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்கி, மத்திய பணியாளர் மற்றும் பயிற்சி துறை உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து பிரதமர் அலுவலக இணையமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியதாவது:மத்திய அரசு ஊழியர்கள், தங்களுக்குரிய பதவி உயர்வைப் பெறாமல் ஓய்வு பெற்றுவிடுவது வருத்தம் அளிக்கிறது. எனவே, மத்திய அரசின் மூன்று பிரிவுகளைச் சேர்ந்த, 8,089 ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்க பிரதமர் மோடி முடிவு செய்தார். இதற்காக அவருக்கு நன்றி தெரிவிக்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.
மத்திய அரசு உத்தரவுப்படி, மத்திய செயலக சேவைப் பிரிவில், 4,734 பேர் பதவி உயர்வு பெற்றுள்ளனர். மத்திய செயலக சுருக்கெழுத்தர் சேவை, மத்திய செயலக எழுத்தர் சேவை ஆகியவற்றில் முறையே, 2,966 பேர், 389 பேர் பதவி உயர்வு பெற்றுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
Advertisement