மற்றொரு மகள், டிரைவர் தற்கொலை| Dinamalar

மும்பை : மஹாராஷ்டிராவில் தாய், மகள் கொலை செய்யப்பட்டனர். மற்றொரு மகள் மற்றும் அந்த வீட்டின் டிரைவர் இருவரும் தற்கொலை செய்து கொண்டனர்.

மஹா., தலைநகர் மும்பையின் புறநகரான கண்டிவிலியில் உள்ள ஒரு வீட்டில் வசித்த கிரண் தல்வி,45, அவரது மகள் முஸ்கன்,26, இருவரும் ஒரு அறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தனர். கிரணின் மற்றொரு மகள் பூமி, 17, மற்றும் அவர்கள் வீட்டின் டிரைவர் ஷிவ்தயாள் சென்,60, இருவரும் மற்றொரு அறையில் தூக்கிட்டு இறந்து கிடந்தனர்.

இதுகுறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஷிவ்தயாள் அந்த வீட்டில் 10 ஆண்டுகளாக டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். குடும்ப பிரச்னை காரணமாக ஷிவ்தயாளும், பூமியும் சேர்ந்து கிரண் மற்றும் முஸ்கனை கொலை செய்துள்ளனர். பின், இருவரும் கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. கடிதத்தை கைப்பற்றியுள்ள போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.