ராக்கெட்டுகளை ஏவுவதற்கு குலசேகரப்பட்டினத்தை தேர்வு செய்தது ஏன்?-இஸ்ரோ விஞ்ஞானி புதிய தகவல்

ராக்கெட்டுகளை ஏவுவதற்கு குலசேகரப்பட்டினத்தை தேர்வு செய்தது ஏன்? என்று இஸ்ரோவின் மூத்த விஞ்ஞானி வெங்கட்ராமன் புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
அந்தப் பேட்டியில், “தமிழகத்தின் தென் பகுதியில் இருக்கும் குலசேகரபட்டினத்தில் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் புதிய ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக 2000 ஏக்கர் நிலம் கையகப்படுத்த உதவிய தமிழக அரசுக்கு இஸ்ரோ சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
image
இந்தியாவிலேயே புவியியல் அடிப்படையில் பூமத்திய ரேகைக்கு அருகில் ஸ்ரீஹரிகோட்டா இருப்பதால்தான் தலைசிறந்த ஏவுதளமாக விளங்குகிறது. அதேபோல் பூமத்திய ரேகைக்கு இன்னும் மிக அருகில் குலசேகரப்பட்டணம் இருப்பதால், குறைந்த பொருட்செலவில் ராக்கெட்டுகளை அனுப்ப புவியியல் ரீதியாக குலசேகரப்பட்டினம் உகந்த பகுதியாக இருப்பதாக இஸ்ரோ கண்டறிந்துள்ளது.
அது மட்டுமில்லாமல் பூமி, கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி சாய்ந்த கோணத்தில் சுழல்கிறது கிழக்குப் பகுதிக்கு அருகில் இருந்து அனுப்பினால், குறைந்த எரிபொருள் செலவில் பூமியின் சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்த முடியும் இது இந்தியாவில் எந்த பகுதிக்கும் இல்லாத அமைவிடம் குலசேகரப்பட்டினத்தில் அமைந்திருக்கிறது.
image
இஸ்ரோவின் அடுத்த திட்டம் சிறிய வகையிலான செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பும் எஸ்எஸ்எல்வி திட்டம் ஜூலை மாதம் இறுதி அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் இருக்கும்” என்று கூறினார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.