மத்திய அரசு இன்று பல்வேறு அதிரடியான அறிவிப்புகளை கொடுத்து வருகின்றது. குறிப்பாக தங்கம் இறக்குமதி வரி, பெட்ரோல் , டீசல் மற்றும் ஏடிஎப் (aviation turbine fuel) மீதான ஏற்றுமதிக்கு கூடுதல் வரி விதித்துள்ளது.
இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படும் ஒரு டன் கச்சா எண்ணெய்க்கு 294 டாலர் வரி விதிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த அதிரடி நடவடிக்கையால் பெட்ரோலுக்கு 6 ரூபாயும், டீசலுக்கு 13 ரூபாயும், விமான எரிபொருளுக்கும் 13 ரூபாயும் வரி செலுத்த வேண்டியிருக்கும். இதோடு தங்கம் இறக்குமதிக்கும் இனி 12.5% வரி செலுத்த வேண்டியிருக்கும்.
ஜூலை 1 முதல்.. 3 முக்கிய வருமான வரி மாற்றங்கள்.. உஷாரா இருங்க!
விலை குறைய வழிவகுக்கலாம்
அச்சச்சோ வரி அதிகரிக்கப்பட்டுள்ளதே உள்நாட்டிலும் விலை அதிகரிக்குமோ என்ற அச்சம் எழலாம். இது ஏற்றுமதிக்கான கூடுதல் வரி என்பதால், ஏற்றுமதி குறையலாம். ஏற்றுமதி குறையும் பட்சத்தில் எண்ணெய் நிறுவனங்கள், அதனை உள்நாட்டிலேயே அதிகம் விற்பனை செய்ய வழிவகுக்கலாம். இது விலை குறைய வாய்ப்பாக அமையலாம்.
உள்நாட்டில் செய்யப்படும் உற்பத்திக்கும் வரி
அதோடு கச்சா எண்ணெய் உற்பத்தியாளர்களால் பெறப்படும் ஆதாயங்களுக்கும் மத்திய அரசு வரியினை அறிவித்துள்ளது. இது உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய் மீது டன் ஒன்றுக்கு 23,230 ரூபாயினை கூடுதல் வரியாக விதித்துள்ளது. இதனால் இனி உள்நாட்டிலும் விலை அதிகரிக்கலாம் என்ற நிலை எழுந்துள்ளது.
கடும் சரிவில் பங்குகள்
மத்திய அரசின் இந்த அறிவிப்பு பிறகு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஓஎன்ஜிசி உள்ளிட்ட பங்குகள் கடும் சரிவினைக் கண்டுள்ளன. ரிலையன்ஸ் பங்குகள் 5% மேலாக சரிவினைக் கண்டுள்ளன. இதே ஓஎன்ஜிசி பங்குகள் இன்று காலை அமர்வில் 10% மேலாக சரிவினைக் கண்டுள்ளது. பிஎஸ்இ சென்செக்ஸ் 1% மும் சரிவினைக் கண்டுள்ளன.
தற்போதைய நிலவரம் என்ன?
12.42 மணியளவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது 6.04% சரிந்து, 2438.35 ரூபாயாக என் எஸ் இ-யில் வர்த்தகமாகி வருகின்றது.
இதே ஓஎன்ஜிசி நிறுவனத்தின் பங்கு விலையானது 11.91% சரிந்து, 133.50 ரூபாயாக என் எஸ் இ-யில் வர்த்தகமாகி வருகின்றது.
டைட்டன் நிறுவன பங்கின் விலையும் என் எஸ் இ-யில் 2.07% குறைந்து, 1900.70 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது.
ஆயில் இன்டெக்ஸ்
இதே சென்செக்ஸ் 417.06 புள்ளிகள் குறைந்து, 52,599.22 புள்ளிகளாகவும், நிஃப்டி 132.1 புள்ளிகள் குறைந்து, 15,6488.15 புளளிகளாகவும் வர்த்தகமாகி வருகின்றது. இதில் பி எஸ் இ ஆயில் & கேஸ் குறியீடானது 3% மேலாக சரிவிலும் காணப்படுகின்றது.
என்ன பிரச்சனை?
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையானது தாறுமாறாக ஏற்றம் கண்டு வந்தாலும், உள் நாட்டில் விலை குறைவாக இருந்தால், ரிலையன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் நல்ல வருவாயினை ஈட்டி வந்தன. ஆனால் மத்திய அரசின் இந்த அறிவிப்பினால் இனி அது முடியாது. இது நிறுவனங்களின் மார்ஜினில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். வளர்ச்சியில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். எனினும் தங்கம் மீதான வரி அதிகரிப்பு தங்கம் விலையினை ஊக்குவிக்கலாம்.
தனியார் நிறுவனங்கள் பாதிப்பு
குறிப்பாக ரிலையன்ஸ் நிறுவனம் உள் நாட்டு எண்ணெயினை பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து லாபம் பார்த்து வந்தது. ஆனால் இனி அதில் தாக்கம் இருக்கலாம். ஆக இதற்கிடையில் தான் எண்ணெய் நிறுவனங்களின் பங்கு விலையானது கடுமையான சரிவினைக் கண்டுள்ளது.
ஈடுகட்டும் செயலா?
குறிப்பாக சொல்லவேண்டுமானால் தனியார் சுத்திகரிப்பாளர்கள் இதன் முலம் நல்ல லாபம் பார்த்து வந்த நிலையில் இனி அதில் தாக்கம் இருக்கலாம். மத்திய அரசின் இந்த அறிவிப்பானது மே21, 2022ல் பெட்ரோல், டீசல் மீதான வரியினை குறைந்த நிலையில், தற்போது அதனை சீராக்கும் விதமாக இந்த வரிகள் வந்துள்ளது. எனினும் இந்த வரி அதிகரிப்பானது மக்களுக்கு தாக்கத்தினை ஏற்படுத்தாது. எனினும் தங்கத்தின் மீதான வரி அதிகரிப்பு உள்நாட்டில் தங்கம் விலையினை ஊக்குவிக்கலாம்.
RIL, Titan, ONGC shares crashed after govt hikes export and import duties
RIL, Titan, ONGC shares crashed after govt hikes export and import duties/ரிலையன்ஸ் டைட்டன், ONCC பங்குகளை பந்தாடும் மத்திய அரசின் அறிவிப்பு..!