2022-23 ஆம் நிதியாண்டின் 2வது காலாண்டின் முதல் வர்த்தக நாளில் எதிர்பார்க்கப்பட்டத்தை போலேவே சரிவுடன் துவங்கியுள்ளது, இதைவிட முக்கியமாக அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வெள்ளிக்கிழமை காலை வர்த்தகத்தில் 79 ரூபாய்க்குக் கீழ் சரிந்துள்ளது.
இதைத் தாண்டி அமெரிக்க மற்றும் ஆசிய சந்தைகளின் தாக்கத்தால் இந்திய சந்தையில் இருந்து முதல் 6 மாதத்தில் மட்டும் சுமார் 2.1 லட்சம் கோடி ரூபாய் வெளியேறியுள்ளது. இது ரீடைல் முதலீட்டாளர்களின் லாபத்தைப் பெரிய ஓட்டையை உருவாக்கிய நிலையில் மத்திய அரசின் அறிவிப்பு ரிலையன்ஸ் தலையெழுத்தை மாற்றியது.
வெள்ளிக்கிழமை வர்த்தகம்
வெள்ளிக்கிழமை வர்த்தகம் 500 புள்ளிகள் சரிவுடன் துவங்கினாலும் நுகர்வோர் பொருட்கள் மற்றும் நிதியியல் துறை பங்குகள் மீது அதிகப்படியான முதலீடுகள் குவிந்த காரணத்தால் பெரும் சரிவில் இருந்து தப்பித்தது.
சென்செக்ஸ், நிஃப்டி
இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 111.01 புள்ளிகள் சரிந்து 52,907.93 புள்ளிகளை எட்டியது, நிஃப்டி குறியீடு 28.20 புள்ளிகள் சரிந்து 15,752.05 புள்ளிகளை எட்டியது. இதேவேளையில் மத்திய அரசின் அறிவிப்பு மும்பை பங்குச்சந்தையின் சிங்கமாக விளங்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளை மோசமான சரிவுக்கு தள்ளப்பட்டது.
ஏற்றுமதி வரி
மத்திய அரசு பெட்ரோல், டீசல், விமான எரிபொருள் மீதான ஏற்றுமதி வரியை உயர்த்தியதுள்ளது. இந்திய ரீடைல் சந்தையில் மக்களுக்கும், நிறுவனங்களுக்கும் போதுமான எரிபொருள் விநியோகத்தை உறுதி செய்ய வேண்டும் என்பதற்காக மத்திய நிதியமைச்சத்தின் முடிவின் அடிப்படையில் மத்திய அரசு அனைத்து எரிபொருள் மீதான வரியை அதிகரித்தது.
பெட்ரோல், டீசல், விமான எரிபொருள்
மத்திய அரசின் அறிவிப்பின் படி டீசல் மீதான ஏற்றுமதி வரி லிட்டருக்கு 13 ரூபாய் உயர்ந்துள்ளது, பெட்ரோல் மீதான ஏற்றுமதி வரி லிட்டருக்கு 6 ரூபாய் உயர்ந்துள்ளது, விமான எரிபொருள் மீதான மீதான ஏற்றுமதி வரி லிட்டருக்கு 1 ரூபாய் உயர்ந்துள்ளது.
உள்நாட்டு எரிபொருள் விலை
மத்திய அரசின் ஏற்றுமதி வரி உயர்வால் உள்நாட்டு எரிபொருள் விலையில் எவ்விதமான மாற்றமும் இருக்காது. ஆனால் இதேவேளையில் எரிபொருள் ஏற்றுமதியை முக்கிய வர்த்தகமாக கொண்டு இருக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-க்கு பெரும் பாதிப்பாக மாறியுள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
இந்த அறிவிப்பை தொடர்ந்து 2,580 ரூபாய் வலையில் வர்த்தகத்தை துவங்கிய ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 2,365 ரூபாய் வரையில் சரிந்தது.ரிலையன்ஸ் பங்குகள் 2, நவம்பர் 2020க்கு பின் மோசமான சரிவை இன்று சரிந்துள்ளது, இந்நிறுவனத்தின் 52 வார சரிவு அளவு 2016.60 ரூபாய்.
1.5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் இன்று 9 சதவீதம் வரையில் சரிந்தாலும், வர்த்தக முடிவில் 7.14 சதவீதம் வரையில் சரிந்தது. இதன் மூலம் ரிலையன்ஸ் சுமார் 1.5 லட்சம் கோடி ரூபாய் அளவிலான சந்தை மதிப்பை இழந்தது. ரிலையன்ஸ் போலவே ONGC பங்குகள் 12.3 சதவீதம் வரையில் சரிந்தது.
Mukesh Ambani’s Reliance Mcap lost ₹1.5 lakh cr amid union govt raises export duty on petrol, diesel, ATF
Mukesh Ambani’s Reliance Mcap lost ₹1.5 lakh cr amid union govt raises export duty on petrol, diesel, ATF ரிலையன்ஸ் தலையெழுத்தை மாற்றிய மத்திய அரசின் அறிவிப்பு.. 1.5 லட்சம் கோடி இழப்பு..!