பர்மிங்காம்,
கடந்த ஆண்டு கொரோனா அச்சத்தால் தள்ளிவைக்கப்பட்ட இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் இன்று நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
தொடக்க ஆட்டக்காரர்களாக சுப்மன் கில்லும், புஜாராவும் களமிறங்கினர். கில் 17 ரன்னிலும், புஜாரா 13 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். விகாரியும் 20 ரன்னுக்கு ஆட்டமிழந்தார்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 11 ரன்னில் போல்டானார். ஸ்ரேயஸ் அய்யர் 15 ரன்னில் ஆண்டர்சன் பந்துச்சில் விக்கெட் கீப்பர் பில்லிங்சிடம் பிடிபட்டார். இதனால் இந்திய அணி 100 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது.
இதையடுத்து ரிஷப் பண்ட்டும், ஜடேஜாவும் இணைந்து தடுமாடி வரும் இந்திய அணியை நல்ல நிலைக்கு கொண்டுவர முயற்சித்து வருகின்றனர். ரிஷப் பண்டி அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார்.
இந்திய அணி முதல் நாள் தேநீர் இடைவேளை வரை 5 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்களை எடுத்துள்ளது. ரிஷப் பண்ட்டும், ஜடேஜாவும் தொடர்ந்து விளையாடு வருகின்றனர்.