சென்னை : லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குகளின் விசாரணைக்கு தடை கேட்ட எஸ்.பி.வேலுமணி கோரிக்கை மீண்டும் நிராகரிக்கப்பட்டது. அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி கோரிக்கையை 2வது முறையாக உயர்நீதிமன்றம் நிராகரித்தது. மனு பற்றி லஞ்ச ஒழிப்புத்துறை, திமுக, அறப்போர் இயக்கம் பதில் அளிக்கவும் தலைமை நீதிபதி அமர்வு ஆணையிட்டுள்ளது.