தனது சொந்த நிதியில் இருந்து, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு 9,00 000 ரூபா செலவில், வாடகை அடிப்படையில் புகைப்பட தரவுத்தளத்தை வழங்க நடவடிக்கை எடுதாதுள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.
கடவுச்சீட்டுக்கான அங்கீகரிக்கப்பட்ட புகைப்படக் காட்சியகங்களில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களைத் திணைக்களத்தின் தரவுத்தளத்திற்குப் உட்படுத்துவதில் உள்ள பிரச்சினைக்கு நீண்டகாலத் தீர்வு காணப்படும் வரை இந்தத் தரவுத்தள வசதியை முன்னெடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கு செல்வதற்கு தேவையான ஆவணங்களை பூர்த்தி செய்துள்ள நபர்களுக்கு கடவுச்சீட்டு வழங்குவதற்கு, பத்தரமுல்ல சுஹுருபாயவில் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தில் தனியான கருமபீடம் ஒன்று திறக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இதற்கமைவாக, உரிய ஆவணங்களை பூர்த்தி செய்தவர்கள், வழக்கமான வரிசையில் காத்திருக்காமல், இந்த விசேட கரும பீடத்திற்கச் சென்று, கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
இலங்கையர்களை திருமணம் செய்யும் வெளிநாட்டவர்களுக்கு, இலங்கையில் வழங்கப்படும் ஒரு வருட வீசா காலம், 5 வருடங்களாக நீடிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.