வேலூர்: வேலூர் மாநகராட்சியில் பைக் சக்கரங்களை புதைத்து அலட்சியமாக சாலை அமைத்த ஒப்பந்தத்தாரின் ஒப்பந்தத்தை ரத்து செய்து மேயர் சுஜாதா உத்தரவிட்டுள்ளார். வேலூர் மெயின் பஜாரில் இருசக்கர வாகனத்தை அகற்றாமல் சாலை போடப்பட்டது சமூகவலைத்தளங்களில் பேசுபொருளானது.
