வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி-அதிவேகமாக செல்வதை கட்டுப்படுத்துவது, ஹெல்மெட் அணிவது, ‘சீட் பெல்ட்’ அணிவது ஆகியவற்றின் வாயிலாக, இந்தியாவில், ஒரு ஆண்டில், 30 ஆயிரம் உயிரிழப்பை தடுக்க முடியும் என, ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
மருத்துவம் தொடர்பான ஆய்வுக் கட்டுரைகளை வெளியிடும், ‘லான்செட்’ இதழ், சமீபத்தில் ஒரு ஆய்வு கட்டுரையை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ள தாவது:உலகெங்கும், ஒவ்வொரு ஆண்டும், 13.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சாலை விபத்துகளில் இறக்கின்றனர்.அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் நான்கு முக்கிய காரணிகளை சரியான முறையில் கையாண்டால், 3.47 லட்சம் முதல், 5.4 லட்சம் வரையிலான உயிரிழப்பை தடுக்க முடியும்.வாகனத்தை அதிவேகமாக ஓட்டுவதை கட்டுப்படுத்துவது, ஹெல்மெட் அணிவது, காரில் சீட் பெல்ட் அணிவது, மது போதையில் வாகனம் ஓட்டுவதை கைவிடுவது ஆகியவற்றை கையாண்டால், உயிரிழப்பை வெகுவாக குறைத்து விடலாம்.
இந்தியாவில், இந்த நான்கு விஷயத்தை கவனித்தால், ஆண்டுக்கு, 30 ஆயிரம் உயிரிழப்பை தடுக்க முடியும்.குறிப்பாக, வேகமாக செல்வதன் வாயிலாக ஏற்படும், 20,554 உயிரிழப்பை தடுக்கலாம். ஹெல்மெட் அணிவதை முறையாக பின்பற்றினால், 5,683 உயிரிழப்பை தடுக்கலாம்.கார்களில் சீட் பெல்ட் அணிந்தால், 3,204 உயிரிழப்பை தடுக்கலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.இந்தியாவில், குடி போதையால் சாலை விபத்தில் உயிரிழப்போர் குறித்த தகவல்கள், இந்த ஆய்வறிக்கையில் இடம்பெறவில்லை.
Advertisement