ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே உள்ள நாரையூரணி பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி பாலமுருகன் (வயது 37). இந்த நிலையில் திருச்சியை சேர்ந்த இவரது அண்ணன் மகளான 15 வயது பள்ளி சிறுமி நாரையூரணிக்கு வந்திருந்தார்.
இந்நிலையில் நேற்றைய தினம் வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் சித்தப்பா பாலமுருகன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம் செல்போனில் நடந்ததை தெரிவித்துள்ளார்.
இதனைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர், இதுகுறித்து உச்சிப்புளி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பாலமுருகன் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார், பாலமுருகனை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர். அதனைத்தொடர்ந்து, பாலமுருகனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.