மத்திய அரசு அறிமுகப்படுத்திய புதிய ஊதிய திட்டம் இன்றுமுதல் அதாவது ஜூலை 1 முதல் அமலுக்கு வர உள்ளது.
இந்த புதிய ஊதிய திட்டத்தின்படி பல்வேறு மாற்றங்கள் நடைபெற இருக்கின்றன என்பதை பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் ஒரு நிறுவனத்திலிருந்து ஊழியர் ஒருவர் ராஜினாமா செய்தால் அவருக்கு இரண்டு நாளில் சம்பளம் உள்பட அனைத்தையும் செட்டில்மெண்ட் செய்ய வேண்டும் என புதிய ஊதிய திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொதுத்துறை வங்கிகளை மொத்தமாக கைகழுவ மோடி அரசு திட்டம்..? வங்கி ஊழியர்கள் அதிர்ச்சி..!

புதிய ஊதிய திட்டம்
புதிய ஊதிய திட்டம் இன்று முதல் அமலுக்கு வர இருக்கும் நிலையில் இந்த திட்டத்தின்படி ஒரு ஊழியர் நிறுவனத்தில் இருந்து ராஜினாமா செய்தாலோ, பணி நீக்கம் செய்யப்பட்டாலோ, அல்லது வேலை மற்றும் சேவைகளில் இருந்து நீக்கம் செய்யப்பட்டாலோ அவருக்கு இரண்டு நாட்களுக்குள் ஊதியம் மற்றும் நிலுவை தொகைகள் முழுமையாக நிறுவனம் செலுத்த வேண்டும் என்று புதிய ஊதிய திட்டத்தில் கூறியிருக்கிறது.

நிலுவைத்தொகை
ஒரு ஊழியர் வேலையிலிருந்து நின்ற நாளிலிருந்து 45 முதல் 60 நாட்கள் வரையிலான சம்பளம் மற்றும் நிலுவை தொகையை முழுமையாக செலுத்துவது என்பது நிறுவனங்கள் பின்பற்றிவரும் நடைமுறையாக உள்ளது. இது சில சமயம் 90 நாட்கள் வரை செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொழிலாளர் உறவு
இந்த நிலையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட புதிய சீர்திருத்த ஊதிய திட்டத்தின்படி தொழிலாளர் உறவு, சமூக பாதுகாப்பு, தொழில் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள் ஆகியவை அடங்கியுள்ளன.

2 நாள் மட்டுமே அவகாசம்
இந்த புதிய தொழிலாளர் சட்டத்தின்படி ஒரு ஊழியர் சேவையில் இருந்து நீக்கப்பட்டால் அல்லது பணி நீக்கம் செய்யப்பட்டால் அல்லது பணியில் இருந்து விலகினால் அல்லது நிறுவனத்தை மூடியதால் வேலை இல்லாமல் இருந்தால் அவருக்கு செலுத்த வேண்டிய ஊதியம் மற்றும் நிலுவைத்தொகை 2 வேலை நாட்களுக்குள் செலுத்தப்பட வேண்டும் என்பது புதிய விதியாக அமைக்கப்பட்டுள்ளது.

செட்டில்மெண்ட்
தற்போது வேலையிலிருந்து நின்ற ஊழியர்களுக்கு செட்டில்மெண்ட் செய்யும் கால அளவு அதிகமாக இருக்கும் நிலையில் இனி புதிய ஊதிய திட்டத்தின்படி இரண்டு நாட்களில் அவர்களுக்கு செட்டில்மெண்ட் சேர்ந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது. புதிய ஊதிய திட்டத்தின் இந்த அம்சம் வேலையிலிருந்து நிற்கும் ஊழியர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

90% மாநிலங்கள்
இந்த புதிய ஊதிய திட்டத்தை 90 சதவீத மாநிலங்களில் ஏற்கனவே ஏற்றுக்கொண்டதாக மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

3 நாட்கள் விடுமுறை
இதுவரை ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் நாள் ஒன்றுக்கு 8 முதல் 9 மணி நேரம் வேலை பார்த்துக் கொண்டிருந்த நிலையில் புதிய ஊதிய திட்டத்தின்படி இனி 12 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும். தினசரி வேலை நேரம் அதிகரிக்கப்படுவதால் அந்த ஊழியர்களுக்கு வார விடுமுறையாக மூன்று நாட்கள் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. புதிய ஊதிய திட்டத்தின்படி வேலை நேரம் என்பது 48 மணிநேரமாக நிர்ணயிக்கப்படும்.

50% பிஃஎப்
மேலும் புதிய ஊதிய திட்டத்தின்படி ஒரு ஊழியரின் அடிப்படை சம்பளம் மொத்த சம்பளத்தில் 50 சதவீதம் இருக்க வேண்டும் என்றும் இது ஊழியர் மற்றும் முதலாளிகள் வழங்கும் பிஎஃப் பங்குகளை அதிகரிக்கும் என்றும் குறிப்பிடத்தக்கது.

சிறப்பு அம்சம்
ஊழியரின் அடிப்படை சம்பளம் 50% வரை அதிகரிப்பதால் அவர் கட்ட வேண்டிய பிஎஃப் பணமும் அதிகரிக்கும் என்பதால் வீட்டுக்கு எடுத்துச் செல்லும் தொகை குறைவாக இருக்கும். இருப்பினும் அவர் ஓய்வு பெறும் காலத்தில் மொத்தமாக ஒரு மிகப்பெரிய தொகை அவருக்கு கிடைக்கும் என்பது இந்த புதிய ஊதிய திட்டத்தின் சிறப்பு அம்சமாகும்.
New Wage Code says Full and Final Settlement Within Two Days to Resigning employee
New Wage Code says Full and Final Settlement Within Two Days to Resigning employee | 2 நாளில் மொத்தமா செட்டில்மெண்ட் செய்யனும்: புதிய ஊதிய திட்டத்தின் முக்கிய அம்சம்