அமெரிக்காவில் 2,000 டொலர் லொட்டரி வென்றதாக நினைத்த டிரக் டிரைவருக்கு மிகப்பெரிய ஜாக்பாட் அடித்துள்ளது.
அமெரிக்காவில் 48 வயதான டிரக் டிரைவர் ஒருவர் மிச்சிகன் வழியாக செல்லும் போது லொட்டரி சீட்டு ஒன்றை வாங்கியுள்ளார்.
அந்த நபர் லொட்டரி அட்டையை கீறி, ஒன்லைனில் எண்ணைப் பார்த்தபோது தனக்கு பரிசு விழுந்துள்ளதை தெரிந்து கொண்டார். அவர் ஆரம்பத்தில் அதனை சாதாரண பரிசுத் தொகை என்று தான் நினைத்தார்.
பரிசுத்தொகையை பெற உரிமைகோரலை தாக்கல் செய்ய தனக்கு செய்தி வந்தபோது, வெறும் 2,000 அமெரிக்க டொலர் பரிசுகளில் ஒன்றை வென்றதாகவே கருதியுள்ளார்.
ஆனால் தனது லொட்டரி சீட்டில் 1 மில்லியன் அமெரிக்க டொலருக்கான ஜாக்பாட் அவர் வென்றுள்ளார். அதனைப் பார்த்தபோது தன கண்களையே தன்னால் நமபி முடியவில்லை என அவர் கூறினார். 2000 டொலர் கிடைத்தது என நினைத்த அவர் மில்லியனர் ஆனார்.
தன்னைப் பற்றியா விவரங்களை வெளியிடவேண்டாம் என நினைத்த அந்த அதிர்ஷ்டசாலி நபர், பரிசை உறுதி செய்ய லொட்டரி அலுவலகத்தை அழைத்தார்.
அவர், லொட்டரி அலுவலகத்திடம் பரிசுத் தொகையை 30 வருடாந்திர கொடுப்பனவுகளுக்கு பதிலாக ஒரே தொகையாக சுமார் 693,000 டொலரை மொத்த தொகையாக வழங்குமாறு கூறினார்.
அவர் இப்போது ஒரு புதிய வாகனத்தை வாங்க திட்டமிட்டுள்ளார், பின்னர் மீதமுள்ள பணத்தை சேமிக்க திட்டமிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்: கனடாவுக்கு பயணிப்போருக்கு ஒரு முக்கிய செய்தி…
மே மாதம், பிரித்தானியாவில் வசிக்கும் தம்பதி இதேபோன்று மிகப்பெரிய தொகைக்கான ஜாக்பாட்டை வென்றது. கீழ் லாரா ஹால் மற்றும் கிர்க் ஸ்டீவன்ஸ் எனும் அறியப்படும் அந்த ஜோடி ‘செட் ஃபார் லைஃப்’ திட்டத்தின் படி, பரிசுத்தொகையை அடுத்த 30 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் 10,000 பவுண்டுகள் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.