தூத்துக்குடி துறைமுக கப்பலில் பணிக்கு சென்ற இளைஞர் மர்மான முறையில் மரணமடைந்தது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டுமென உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தூத்துக்குடி டூவிபுரம் 3வது தெருவைச் சேர்ந்த தங்கராஜ் என்பவரின் மகன் சம்ராஜ் (27), இவர், தூத்துக்குடி, துறைமுக கப்பலில் பழுது நீக்கும் பணி செய்து வந்தார். இந்நிலையில், நேற்று என்.வி. ஸ்டார்க் என்ற கப்பலை பழுது பார்க்க சம்ராஜ் (27), மற்றும் அவருடன் கண்ணன் (27) என்பவரும் 4 மீட்டர் அடியில் பழுது பார்க்க கீழே சென்றுள்ளனர். இதையடுத்து வேலையை முடித்துவிட்டு கண்ணன் மேலே வந்த நிலையில், சம்ராஜ் வரவில்லை.
இதையடுத்து அவரை காணவில்லை என்று தேடியபோது அவர், இறந்த நிலையில் மிதந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு வஉசி துறைமுக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இருந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து மரைன் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு சாம்ராஜ் உடலை பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனை அறைக்கு கொண்டு வந்தனர். இதுகுறித்து சம்ராஜ் உறவினர்கள் கூறுகையில், 400 மீட்டர் ஆழத்தில் இறங்கி வேலை பார்க்கு சாம்ராஜ் வெறும் 4 மீட்டர் அளவிலே நேற்று வேலை பார்த்துள்ளார். ஆனால் இவர் இறந்ததாக கூறுகின்றனர். எனவே அவரது மரணத்தில் சந்தேகம் இருக்கிறது. விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.
நேற்று சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், இன்று தலையில் பலத்த காயம் ஏற்பட்டடுள்ளது என்றனர். ஆகவே உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM