#BigBreaking || நாளை சிறப்பு கூட்டத்தில் ஓபிஎஸ், இபிஎஸ்… பாஜக தரப்பில் வெளியான பரபரப்பு தகவல்.!

புதிய குடியரசு தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் ஜூலை 18-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூலை 21-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. 

இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி பாஜக சார்பில் திரவுபதி முர்மு குடியரசு தலைவர் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். 

குடியரசுத் தலைவருக்கான தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் (பாஜக) வேட்பாளராக அறிவிக்கப்பட்ட திரவுபதி முர்மு, தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளார்.

அதன்படி, நாளை தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்களை சந்திக்க இருக்கிறார். சென்னையில் நடைபெற உள்ள இதற்கான நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களுக்கான கூட்டத்தில் அதிமுகவின் தலைமைகளான ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமியும் பங்கேற்க உள்ளதாக பாஜக தரப்பிலிருந்து பரபரப்பு தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

ஏற்கனவே அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், நீதிமன்றத்தில் அடுத்தடுத்து வழக்குகள் தொடரப்பட்டுள்ள நிலையில், நாளை நடக்க உள்ள இந்த நிகழ்ச்சிகள் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் கலந்து கொள்வார்களா என்ற எதிர்பார்ப்பு அதிமுகவினர் மத்தியில் எகிறி உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.