மே மாதத்தில், ஜிஎஸ்டி வசூல் அளவு கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு 44 சதவீதம் அதிகரித்து 1,40,885 கோடி ரூபாயாக இருந்தது. ஜிஎஸ்டி தொடங்கப்பட்டதில் இருந்து ஐந்தாவது முறையாக மாதாந்திர ஜிஎஸ்டி வரி வசூல் அளவு 1.40 லட்சம் கோடி ரூபாய் அளவீட்டைத் தாண்டியது மற்றும் மார்ச் 2022 முதல் இது தொடர்ச்சியாக நான்காவது மாதமாகும்.
ஜூன் மாத ஜிஎஸ்டி வரி வசூல் மூலம் மாதம் 1.4 லட்சம் கோடி ரூபாய் என்பது New Normal என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இனி யாரையும் நம்ப தேவையில்லை.. இந்தியா-ரஷ்யா டீம்.. விளாடிமிர் புதின் தரமான திட்டம்..!
ஜிஎஸ்டி வசூல்
ஜூன் மாதத்தில், சிஜிஎஸ்டி வருவாய் 25,306 கோடி ரூபாயாகவும், எஸ்ஜிஎஸ்டி 32,406 கோடி ரூபாயாகவும், ஐஜிஎஸ்டி 75,887 கோடி ரூபாயாகவும், ஜிஎஸ்டி இழப்பீட்டு வரி வசூல் 11,018 கோடி ரூபாயாகவும் உள்ளது.
பங்கீடு
ஐஜிஎஸ்டியில் இருந்து சிஜிஎஸ்டிக்கு ரூ.29,588 கோடியும், எஸ்ஜிஎஸ்டிக்கு ரூ.24,235 கோடியும் அரசு பங்கீடு செய்ததுள்ளது. மேலும், மத்திய மற்றும் மாநிலங்களுக்கு இடையே 50:50 என்ற விகிதத்தில் தற்காலிக அடிப்படையில் ரூ.27,000 கோடி ஐஜிஎஸ்டியை மத்திய அரசு தீர்த்ததுள்ளது.
மத்திய மற்றும் மாநில வருவாய்
ஜூன் மாதத்தில் மத்திய மற்றும் மாநிலங்களின் மொத்த வருவாய் சிஜிஎஸ்டிக்கு ரூ.68,394 கோடியாகவும், எஸ்ஜிஎஸ்டிக்கு ரூ.70,141 கோடியாகவும் உள்ளது. பொருளாதார வளர்ச்சிக்குப் பின்பு ஜிஎஸ்டி வருவாயில் 56 சதவீத வளர்ச்சி என்பது இந்திய வர்த்தகச் சந்தையின் ஸ்திரத்தன்மையைக் காட்டுகிறது.
வரி வசூல்
2022-23 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் மாதாந்திர 1.4 லட்சம் கோடி ரூபாய் அளவிலான வரி வசூல், பல மேக்ரோ பொருளாதாரப் பிரச்சனைகளுக்கு மத்தியில் பதிவு செய்துள்ளது முக்கியமாகவும், கவனிக்க வேண்டிய ஒன்றாக உள்ளது என்று ஜூன் ஜிஎஸ்டி வசூல் குறித்து டெலாய்ட் இந்தியாவின் பங்குதாரர் எம்.எஸ்.மணி கூறினார்.
சண்டிகர் கூட்டம்
சண்டிகரில் இரண்டு நாள் 47வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்தச் சந்திப்பின் போது பல்வேறு பொருட்களின் மீதான ஜிஎஸ்டி வரியும் திருத்தப்பட்டது.
மதுரை கூட்டம்
ஆகஸ்ட் முதல் வாரத்தில் மதுரையில் நடைபெறும் 48வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆன்லைன் கேமிங், குதிரைப் பந்தயம் மற்றும் கேசினோக்கள் மீதான ஜிஎஸ்டி விகிதங்கள் இறுதி செய்யப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
கோவை, சேலம் தொழிற்துறை ஊழியர்களை பதம் பார்க்கும் பணவீக்கம்.. மத்திய அரசு ரிப்போர்ட்..!
GST collections for June at Rs 1.44 lakh crore up 56 percent YoY
GST collections for June at Rs 1.44 lakh crore up 56 percent YoY GST collection: மீண்டும் ரூ.1.4 லட்சம் கோடியை தாண்டியது.. 56% வளர்ச்சி..!