ஒரு நிறுவனத்தின் முதலாளிக்கும் அந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கும் நடந்த வாட்ஸ்அப் உரையாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
முதலாளியின் கேள்விக்கு பதிலளிக்கும் ஊழியர் ‘Hey’ என்ற வார்த்தையை பயன்படுத்தியது தான் இந்த பிரச்சனைக்கு காரணமாக உள்ளது.
‘Hey’ என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டாம் என முதலாளி கூறியதும் அதற்கு தொழிலாளி கூறிய பதிலும் சர்ச்சைக்கு உள்ளாகி உள்ளது.
பிரெஞ்ச் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளியது… வேற லெவலில் இந்திய ட்ரோன் ஸ்டார்ட் அப் நிறுவனம்!
பயன்படுத்தும் வார்த்தைகள்
ஒரு நிறுவனத்தின் ஊழியர், அவரது மேலதிகாரி அல்லது முதலாளியிடம் பேசும்போது சில வார்த்தைகளை பயன்படுத்தினால் அவர்கள் கோபமடைய அதிக வாய்ப்பு இருக்கும் என்ற அனுபவம் பலருக்கு ஏற்பட்டிருக்கும். சில சமயம் சாதாரணமாக கூறும் வார்த்தையைக்கூட மேலதிகாரிகள் அல்லது நிறுவன முதலாளிகள் சீரியசாக எடுத்துக்கொள்ளும் ஆபத்தும் உள்ளது.
முதலாளி – அதிகாரி உரையாடல்
அந்த வகையில் இந்தியாவில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை செய்யும் அதிகாரிக்கும் அவருடைய முதலாளிகும் இடையில் நடந்த ஒரு வாட்ஸப் உரையாடல் மிகப் பெரிய பிரச்சனையாகி அந்த உரையாடலின் ஸ்க்ரீன்ஷாட் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
‘Hey’ என்ற வார்த்தை
ஸ்ரேயாஸ் என்ற ஊழியர் தனது முதலாளியிடம் வாட்ஸ் அப் உரையாடலில் பேசும்போது இந்த அனுபவத்தைப் பெற்றுள்ளார். அவரிடம் முதலாளி, ‘கொடுத்த வேலை முடிக்கப்பட்டு விட்டதா என்று கேட்டபோது, ‘Hey’ என்ற வார்த்தையை பயன்படுத்தி ‘இன்னும் முடிக்கவில்லை’ என்று கூறியிருக்கிறார். இந்த ‘Hey’ என்ற வார்த்தை தான் பிரச்சனைக்கு காரணமாக இருக்கிறது.
அதிருப்திக்குரிய வார்த்தை
உடனே முதலாளி தனது ஊழியரிடம் ‘என்னுடைய பெயர் சந்தீப். என்னிடம் உரையாடும்போது சந்தீப் என்றே அழைக்கலாம். தயவு செய்து ‘Hey’ என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டாம். அது எனக்கு அதிருப்திக்குரிய வார்த்தையாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
அவமதிப்பு
ஒருவேளை என்னுடைய பெயர் உங்களுக்கு நினைவில்லை என்றால் சாதாரணமாக Hi என்று கூறினால் போதும் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் தொழில் முறையாக பேசும்போது ‘Hey’ என்ற வார்த்தையை பயன்படுத்துவது தவறானது என்றும் இது மற்றவர்களுக்கு தெரிந்தால் அவமதிப்பாக கருதப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வாட்ஸ் அப் உரையாடல்
ஸ்ரேயாஸ் இதற்கு பதில் கூறியபோது, ‘நாம் இருவரும் தனிப்பட்ட முறையில் வாட்ஸ்அப் உரையாடலில் தான் பேசிக் கொண்டிருக்கிறோம். லிங்க்ட் இன் அல்லது பொது உரையாடலில் பேசவில்லை. மேலும் என்னுடைய பர்சனல் எண்ணிலிருந்து பேசும் சாதாரண உரையாடல் இது. பொது உரையாடலில் பேசும்போது இவ்வாறான வார்த்தை பயன்படுத்துவதில்லை என கூறியுள்ளார்.
தொழில்முறை உரையாடல்
ஸ்ரேயாஸ் அளித்த இந்த விளக்கத்திற்கு பதிலளித்த சந்தீப், ‘வாட்ஸ்அப் உரையாடல் என்பது தனிப்பட்ட உரையாடல் அல்ல என்றும் இது ஒரு தொழில்முறை உரையாடல்தான் என்றும் எனவே வார்த்தைகளை பயன்படுத்தும் போது கவனமாக இருக்க வேண்டும் என்றும் இது உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன் அல்லது உங்களுக்கு கூடிய சீக்கிரம் புரிய வைப்பேன் என்று கூறியுள்ளார்.
நெட்டிசன்கள் கருத்து
இந்த உரையாடலின் ஸ்கிரீன்ஷாட் சமூக வலைதளங்களிலும் வைரலாகி வரும் நிலையில் நெட்டிசன்கள் இதற்கு பல்வேறு கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகிறார்கள். ‘Hey’ மற்றும் Hi ஆகிய ஆங்கில வார்த்தைகளில் மிகப் பெரிய வித்தியாசம் இல்லை என்றும் ஏறக்குறைய ஒரே மாதிரியான எழுத்துக்களை கொண்டு தான் இருக்கிறது என்றும் இதனை இவ்வளவு சீரியஸாக எடுத்து கொள்ள தேவையில்லை என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
கண்டனம்
மேலும் வாட்ஸ்அப் என்பது தனிப்பட்ட முறையிலான உரையாடல் அல்ல என்று முதலாளி கூறியதற்கு பல நெட்டிசன்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளனர். இந்த உரையாடலில் உள்ள வார்த்தையை பெரிதாக எடுத்து கொண்ட முதலாளி இதை இந்த அளவுக்கு சீரியசாக நினைக்க வேண்டிய அவசியமில்லை என்றும் இது இந்திய முதலாளிகளின் பாகுபாட்டை குறிப்பிடுவதாக கருதப்படுகிறது என்றும் சிலர் கூறுகின்றனர்.
‘சார்’ என்று அழைக்கலாம்
ஒரு சில நெட்டிசன்கள் ஊழியர் மீதும் குறை கூறியுள்ளனர். பொதுவாக மேலதிகாரி அல்லது முதலாளியிடம் பேசும் போது ‘சார்’ என்று அழைத்தால் இதுபோன்ற பிரச்சனை வராது என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த உரையாடல் மிகப்பெரிய அளவில் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Boss says to employee saying ’Hey’ is unprofessional.. WhatsApp text message viral
Boss says to employee saying Hey is unprofessional.. WhatsApp text message viral | ‘Hey’ சொன்னது குத்தமா.. இந்தியா முழுவதும் வைரலான மேனேஜர்..!