India vs England 2022, 5th Test, live score Updates in tamil: இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஒரு டெஸ்ட், 3 டி-20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் ஒரு டெஸ்ட் போட்டியானது 2021-ம் ஆண்டு கொரோனா பரவலால் தள்ளிவைக்கப்பட்டதாகும். அப்போது நடந்த 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், முதல் 4 டெஸ்டுகளில் 2-ல் இந்தியாவும், ஒன்றில் இங்கிலாந்தும் வெற்றி பெற்றன. மற்றொரு போட்டி ‘டிரா’வில் முடிந்ததால் தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை உள்ளது.
கடைசி டெஸ்ட் போட்டிக்கு முன்பாக இந்திய பயிற்சியாளர்கள் இடையே கொரோனா பரவியதால் கலக்கமடைந்த இந்திய வீரர்கள் இறுதி டெஸ்டில் விளையாட மறுத்தனர். இதனால் தள்ளிவைக்கப்பட்ட அந்த டெஸ்ட் போட்டி தான் தற்போது நடக்க உள்ளது. அதன்படி, இந்தியா- இங்கிலாந்து இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பஸ்டனில் இன்று தொடங்குகிறது. இந்திய நேரப்படி போட்டி மாலை 3 மணிக்கு தொடங்கும்.
ஆக்ரோஷத்துடன் இங்கிலாந்து…
இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளராக பிரண்டன் மெக்கல்லம் மற்றும் புதிய கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களது தலைமையிலான இங்கிலாந்து அணி சொந்த மண்ணில் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிய நியூசிலாந்து அணியை வாஷ் அவுட் செய்தது. அதனால் அந்த அணி அதே உத்வேகத்துடன் இந்தியாவை எதிர்கொள்ளும். மேலும், “நியூசிலாந்திடம் காட்டிய அதே ஆக்ரோஷத்தை இந்தியாவிடமும் காட்டுவோம், இந்திய அணியில் நிகழ்ந்துள்ள மாற்றங்கள் குறித்து எங்களுக்கு கவலை இல்லை” என கேப்டன் ஸ்டோக்ஸ் கூறியிருந்தார்.
இங்கிலாந்து டெஸ்ட் அணியில் பென் ஃபோக்ஸ் கொரோனாவால் விலகியுள்ள நிலையில், அவருக்கு பதில் சாம் பில்லிங்ஸ் அணியில் இணைந்துள்ளார். அதேசமயம் ஜேமி ஓவர்டனுக்கு பதில் ஜேம்ஸ் ஆண்டர்சன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
வரலாறு படைக்க தீவிரம் காட்டும் இந்தியா…
இங்கிலாந்து மண்ணில் இந்தியா கடைசியாக 2007-ம் ஆண்டு டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் வென்றது. அந்த அணியை தற்போதைய தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் வழிநடத்தி இருந்தார். அதன்பிறகு 15 ஆண்டுக்கு பிறகு மீண்டும் அங்கு டெஸ்ட் தொடரை வெல்லும் வாய்ப்பு கனிந்துள்ளது. மேலும், இந்திய அணி இங்கிலாந்து மண்ணில் தொடர் ஒன்றில் 3 டெஸ்டுகளில் வெற்றி பெற்றது கிடையாது. எனவே இந்த டெஸ்டில் வெற்றி பெற்றால் அது புதிய வரலாறாக இருக்கும். அதை படைக்க பும்ரா தலைமையிலான அணி தீவிரமாக பயிற்சி செய்து வருகிறது.
நேற்று மற்றொரு கோவிட் சோதனைக்குப் பிறகு கேப்டன் ரோகித்து தொற்று மீண்டும் உறுதி செய்யப்பட்டது. இதனால் ஜஸ்பிரித் பும்ரா அணியை வழிநடத்துவார் என்று தெரிவிக்கப்பட்டது. அணியில் இஷாந்த் சர்மா இல்லை மற்றும் காயம் காரணமாக விலகியுள்ள கே.எல் ராகுலுக்கு பதிலாக சேதேஷ்வர் புஜாரா டாப் ஆடரில் களமாடுவார். மயங்க் அகர்வால் ரோகித்துக்கு பதில் அணியில் இணைந்து இருந்தாலும் அவருக்கு ஆடும் லெவனில் இடம் சந்தேகம் தான்.
தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், கொரோனா தொற்று தாக்குதலுக்குப் பிறகு இங்கிலாந்தில் தாமதமாக அணியில் இணைந்த ஆர் அஷ்வின், உடல் தகுதி உடையவராகவும், தேர்வுக்கு தயாராக இருப்பதாகவும் உறுதிப்படுத்தினார். ஆனால் இந்தியா கடந்த ஆண்டை போல ஜடேஜா மற்றும் தாக்கூர் ஆகிய இரண்டு ஆல்-ரவுண்டர்களுடன் செல்ல வாய்ப்புள்ளது.
இந்திய அணி வீரர்கள் பட்டியல்:-
ஷுப்மன் கில், சேதேஷ்வர் புஜாரா, ஹனுமா விஹாரி, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா (கேப்டன்), முகமது சிராஜ், உமேஷ் யாதவ், ஷர்துல் பாரத் தாகூர், ஸ்ரீகர் பாரத் தாக்கூர் , பிரசித் கிருஷ்ணா
இந்திய அணியின் உத்தேச வீரர்கள் பட்டியல்:
ஷுப்மான் கில், சேதேஷ்வர் புஜாரா, ஹனுமா விஹாரி, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா (கேப்டன்), முகமது சிராஜ்
இங்கிலாந்து அணியின் வீரர்கள் பட்டியல்:-
அலெக்ஸ் லீஸ், சாக் கிராலி, ஒல்லி போப், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோவ், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), சாம் பில்லிங்ஸ், மேட்டி பாட்ஸ், ஸ்டூவர்ட் பிராட், ஜாக் லீச், ஜேம்ஸ் ஆண்டர்சன் பெஞ்ச்பென் ஃபோக்ஸ், கிரேக் ஓவர்டன், ஜேமி ஓவர்டன், ஹாரி புரூக்
இங்கிலாந்து அணியின் உத்தேச வீரர்கள் பட்டியல்:
அலெக்ஸ் லீஸ், சாக் கிராலி, ஒல்லி போப், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோவ், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), சாம் பில்லிங்ஸ் (விக்கெட் கீப்பர்), மேத்யூ பாட்ஸ், ஸ்டூவர்ட் பிராட், ஜாக் லீச், ஜேம்ஸ் ஆண்டர்சன்.
Pataudi Trophy, 2021/22Edgbaston, Birmingham 01 July 2022
England
India
Match Yet To Begin ( Day – 5th Test ) Match begins at 15:00 IST (09:30 GMT)
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil