பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் நிறுவனங்களின் தாய் நிறுவனமான மெட்டா-வின் சிஇஓ பொருளாதாரம் எப்படி இருக்கும் என்றே தெரியாத நிலையில் அனைத்து ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் எப்ப வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று அறிவித்துள்ளது மட்டும் அல்லாமல் உடனடியாகச் செலவுகளைக் குறைக்க முக்கியமான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் இப்பட்டியலில் தற்போது மார்க் ஜூக்கர்பெர்க் தலைமை வகிக்கும் மெட்டா நிறுவனமும் இணைந்துள்ளது.
பணிநீக்க சுனாமி: பைஜூஸ் முதல் டெஸ்லா வரை.. உஷார் மக்களே..!
மெட்டா
2022 ஆம் ஆண்டில் மெட்டா தனது வர்த்தகம் மற்றும் சேவை வளர்ச்சிக்காகச் சுமார் 10000 இன்ஜினியர்களைப் பணியில் சேர்க்க திட்டமிட்டு இருந்தது, இந்நிலையில் சர்வதேச பொருளாதாரத்தில் ஏற்படப்போகும் தாக்கத்தை உணர்ந்து தற்போது 6000 முதல் 7000 இன்ஜினியர்களை மட்டும் பணியில் சேர்த்தால் போதும் என முடிவு செய்துள்ளது.
களையெடுக்கும் பணி
இதுமட்டும் அல்லாமல் தற்போது காலியாக இருக்கும் பணியிடங்களில் புதிய அதிகாரிகளை நியமிக்கப்போவது இல்லை என்று அறிவித்துள்ளார் மார்க் ஜூக்கர்பெர்க். இதன் மூலம் கூடுதலான பணிகளை ஏற்றுக்கொண்டு பணியாற்ற முடியாத ஊழியர்களைக் களையெடுக்கவும் திட்டமிட்டு உள்ளதாக வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.
மார்க் ஜூக்கர்பெர்க்
ஊழியர்களின் திறனை பரிசோதனை செய்யப்போகும் பணிகளில் சூட்டை ஏற்றியுள்ளதாகவும், இதன் மூலம் நிறுவனத்தில் எதிர்கால முரட்டுத்தனமான இலக்குகளை எதிர்கொள்ளத் தயாராக இருக்கும் ஊழியர்களைப் தேடி எடுக்கவும் முடியும் எனத் தெரிவித்துள்ளார் மார்க் ஜூக்கர்பெர்க்.
கடுமையான இலக்கு, பணி
உண்மையாக நிறுவனத்தின் சில ஊழியர்களைப் பணியாற்றவே தகுதி இல்லாதவர்களாக இருக்கிறார்கள். இந்நிலையில் திறமையான மற்றும் விருப்புடன் பணியாற்றும் ஊழியர்களை மட்டும் வைத்துக்கொள்ள அனைத்து ஊழியர்களுக்குக் கடுமையான இலக்குகளும், பணிகளும் வழங்கப்பட உள்ளேன் என வாராந்திர ஊழியர்கள் Q&A கூட்டத்தில் பேசியுள்ளார் மார்க் ஜூக்கர்பெர்க்.
அமெரிக்கப் பொருளாதாரம்
அமெரிக்கப் பொருளாதாரம், வர்த்தகம் ஆகியவை அதிகப்படியான பணவீக்கத்தில் பாதிக்கப்பட்டு உள்ள வேளையில் சிறு நிறுவனங்கள் மட்டும் அல்லாமல் பணம் பலம் அதிகமாகக் கொண்டு இருக்கும் பல முன்னணி நிறுவனங்கள் அமெரிக்கப் பொருளாதாரம் ரெசிஷனுக்குள் வருவதற்குள் செலவுகளைக் குறைக்கும் விதமாக அடுத்தடுத்து பணிநீக்கத்தையும், அலுவலகங்களையும் மூடி வருகிறது.
டெஸ்லா
எலான் மஸ்க்-ன் எலக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா தனது கலிப்போர்னியா அலுவலகத்தை மொத்தமாக மூட முடிவு செய்த நிலையில் ஆட்டோபைலட் அணியில் இருந்து மட்டும் 200 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது.
அலுவலகம் மாற்றம்
இந்நிலையில் ஆட்டோபைலட் அணியில் மீதமுள்ள 150 ஊழியர்களை அருகில் இருக்கும் அலுவலகத்திற்கு மாற்றியுள்ளது எலான் மஸ்க் தலைமையிலான டெஸ்லா நிர்வாகம்.
மேலும் சமீபத்தில் டெஸ்லா திறந்த இரு புதிய தொழிற்சாலையும் அதிகப்படியான பணத்தைச் சாப்பிடுவதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளனர்.
கணவனை வாடகைக்கு விட்ட மனைவி.. அடபாவிகளா.. இப்படி கூடவா பண்ணுவாங்க..?!
Meta to reduce hiring, Mark Zuckerberg warns employees for tough goals
Meta to reduce hiring, Mark Zuckerberg warns employees for tough goals META: ஊழியர்களை மிரட்டும் மார்க் ஜூக்கர்பெர்க்.. எப்ப என்ன நடக்குன்னே தெரியல..?