இந்தியாவிற்கான முதல் நடுத்தர அளவிலான எஸ்யூவியை டொயோட்டா நிறுவனம் அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Toyota Urban Cruiser Hyryder)எஸ்யூவி வெளியிடப்பட்டுள்ளது. மாருதி சுசுகியுடன் இணைந்து தயாரித்துள்ளது. புதிய டொயோட்டா ஹைரைடர் ஆகஸ்ட் மாதம் விற்பனைக்கு வரும். டொயோட்டா டீலர்ஷிப்களிலும் ஆன்லைனிலும் முன்பதிவு அதிகாரப்பூர்வமாக நடந்து வருகிறது.
சர்வதேச சுசுகி மோட்டார் நிறுவனத்தின் விட்டாராவின் குளோபல் C பிளாட்ஃபார்மில் கட்டமைக்கப்பட்டுள்ள அர்பன் க்ரூஸர் ஹைரைடர் இன்ஜின் மற்றும் பவர் ட்ரெயின்களை வரவிருக்கும் மாருதி சுஸுகி விட்டாரா காருடன் பகிர்ந்து கொள்கிறது.
Toyota Urban Cruiser Hyryder
2 என்ஜின் ஆஃப்ஷன் பெறும் ஹைரைடர் காரில் மாருதி சுசூகி நிறுவனத்தின் 1.5 லிட்டர் K-சீரிஸ் பெட்ரோல் எஞ்சின் மைல்டு ஹைபிரிட் தொழில்நுட்பத்துடன் மற்றும் டொயோட்டாவின் 1.5 லிட்டர் TNGA இன்ஜின் ஹைப்ரிட் மாடலாக விளங்கும்.
மைல்ட் ஹைப்ரிட் அதிகபட்சமாக 101.64 ஹெச்பி பவரை வழங்கும். சமீபத்தில் 2022 மாருதி சுஸுகி எர்டிகாவில் அறிமுகப்படுத்தப்பட்ட எஞ்சின் போலவே உள்ளது. இதில் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் ‘சுஸுகி ஆல்-வீல் டிரைவ்’ சிஸ்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
டொயோட்டா ஹைப்ரிட் என்ஜின் பெற்ற செல்ஃப் சார்ஜிங் ஹைப்ரிட் எலக்ட்ரிக் வாகன (SHEV) தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது. இது 114.41 ஹெச்பி பவரை வெளிப்படுத்துகிறது மற்றும் eCVT கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.
டொயோட்டா ஹைரைடரில் உள்ள ஹைபிரிட் 177.6 V லித்தியம்-அயன் பேட்டரியுடன் இணைக்கப்பட்டுள்ளது. அர்பன் க்ரூஸர் ஹைரைடர் 25 கிமீ வரை மின்சாரத்தின் மூலம் இயங்கும் திறன் கொண்டுள்ளது, மேலும், டொயோட்டா Urban Cruiser Hyryder Hyrbid மைலேஜ் செயல்திறன் 24-25kpl இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வெளிநாட்டில் விற்பனை செய்யப்படுகிற புதிய டொயோட்டா எஸ்யூவி கார்களை பிரதிபலிக்கும் சில அம்சங்களை அர்பன் க்ரூஸர் ஹைரைடர் புதிய ஸ்டைலிங் பெறுகிறது. வெளிப்புறத்தில், அர்பன் க்ரூஸர் ஹைரைடர் இரட்டை அடுக்கு பகல்நேர ரன்னிங் விளக்குகளைப் பெறுகிறது. ‘கிரிஸ்டல் அக்ரியாலிக்’ ன கிரில்லின் ஒரு மூலையில் இருந்து மற்றொன்று வரை நீட்டிக்கப்பட குரோம் பாகம் உள்ளது. இது LED பகல்நேர இயங்கும் விளக்குகளை இரண்டு அடுக்குகளாகப் பிரிக்கிறது. பெரிய முழு-எல்இடி ஹெட்லேம்ப்களால் உயரமான ஏர்டேம் கொண்ட ஸ்போர்ட்டியான முன்பக்க பம்பர்களையும் கொண்டுள்ளது.
டொயோட்டா ஹைரைடர் எஸ்யூவி மாடலில் C-வடிவ டெயில்-லைட் கொண்டுள்ளது, இது இரட்டை C-வடிவ பார்க்கிங் விளக்குகளுடன் டெயில்கேட் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. குரோம் பாகம் மையத்திலிருந்து டெயில்-லேம்ப்களுடன் இணைகிற மத்தியில் டொயோட்டா லோகோ கொண்டுள்ளது.
புதிய மாருதி சுஸுகி மற்றும் டொயோட்டா பலேனோ, க்ளான்ஸா மற்றும் புதிய பிரெஸ்ஸா போன்றவற்றைப் போலவே ஹைரைடர் டேஷ்போர்டு லேஅவுட் உள்ளது.
பனோரமிக் சன்ரூஃப், 360 டிகிரி கேமரா, வயர்லெஸ் சார்ஜர், முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே, இணைக்கப்பட்ட கார் தொழில்நுட்பம் மற்றும் கூகுள் மற்றும் சிரி இணக்கத்தன்மையுடன் குரல் உதவி போன்ற அம்சங்களை Hyryder பெறுகிறது. பனோரமிக் சன்ரூஃப், 17 இன்ச் அலாய் வீல்கள், வயர்லெஸ் சார்ஜர், கூல்டு இருக்கைகள், ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே மற்றும் 360 டிகிரி கேமரா ஆகியவை கூடுதல் அம்சங்களாகும்.
பாதுகாப்பு அம்சங்களைப் பொறுத்தவரை, அர்பன் க்ரூஸர் ஹைரைடரில் 6 ஏர்பேக்குகள், டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம், ESP, ஹில்-ஹோல்ட் அசிஸ்ட், அனைத்து பின்புற பயணிகளுக்கும் 3-பாயின்ட் சீட்பெல்ட்கள், ஆல்-வீல் டிஸ்க் பிரேக்குகள் மற்றும் ஹில் டிசென்ட் கன்ட்ரோல் ஆகியவை உள்ளன.
ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ், ஃபோக்ஸ்வேகன் டைகன், மற்றும் ஸ்கோடா குஷாக் ஆகியவற்றை எதிர் கொள்ள உள்ளது.