Xiaomi Launch July 2022: சியோமி நிறுவனம் தனது புதிய கேட்ஜெட் மற்றும் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்கிறது. ஜூலை 4ஆம் தேதி இந்த அறிமுகம் நிகழ்வு நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் நிறுவனத்தின் சியோமி 12எஸ் சீரிஸ் ஸ்மார்ட்போன்களுடன், சியோமி பேண்ட் 7 ப்ரோ ஸ்மார்ட் பேண்டும் அறிமுகம் செய்யப்படுகிறது.
சமீபத்தில் தான் நிறுவனம் சீன மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் தனது சியோமி பேண்ட் 7-ஐ அறிமுகம் செய்தது. அதனைத் தொடர்ந்து, செவ்வக வடிவிலான பெரிய திரையைக் கொண்ட புதிய ப்ரோ வெர்ஷனை பயனர்களுக்காகக் கொண்டு வருகிறது.
ஸ்மார்ட் பேண்ட் அல்லது ஸ்மார்ட் வாட்ச் விரும்பாத, நடுத்தர விரும்பிகளுக்காகவே நிறுவனம் இந்த புதிய கேட்ஜெட்டைக் கொண்டுவருவதாகக் கூறப்படுகிறது. இதன்மூலம், சியோமி தன் சந்தையை விரிவுபடுத்துவதாகக் கூறப்படுகிறது.
சியோமி பேண்ட் 7 ப்ரோ அம்சங்கள் (Xiaomi Band 7 Pro Specifications)
புதிய சியோமி ஸ்மார்ட் பேண்ட் தங்கம், கருப்பு ஆகிய இரு நிறத் தேர்வுகளில் அறிமுகப்படுத்தப்படுகிறது. அம்சங்கள் குறித்து விரிவான தகவல் கிடைக்கவில்லை என்றாலும், சியோமி பேண்ட் 7-இல் கொடுக்கப்பட்ட அனைத்து அம்சங்களும் இதில் இருக்கும் என்று கூறப்படுகிறது.