மின்சார கார் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், அரியானா அரசு 10 இலட்ச ரூபாய் வரை தள்ளுபடி அறிவித்துள்ளது.
மின்சார வாகனக் கொள்கைப்படி எலக்ட்ரிக் கார்களுக்கு 15 விழுக்காடு என்கிற அளவில் தள்ளுபடி கிடைக்கிறது.
வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் நுகர்வோருக்கு வழங்கும் தள்ளுபடித் தொகையை, முதல் பத்தாண்டுகளில் மாநில அரசின் ஜிஎஸ்டியில் 50 விழுக்காடு தள்ளுபடி மூலம் திரும்பப் பெற வகை செய்யப்பட்டுள்ளது.