உள்ளாட்சியில் நல்லாட்சி என்ற தலைப்பில் நகர்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டை நாமக்கல் மாவட்டம் பொம்மைக்குட்டை மேட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்.
இதையொட்டி நாமக்கல் சென்றுள்ள முதலமைச்சர், மாநாடு நடைபெறும் இடத்தைப் பார்வையிட்டார். அப்போது கொங்கு நாட்டின் பாரம்பரிய நடனமான பெருச் சலங்கை, வள்ளிக்கும்மி ஆட்டத்தை பார்த்து ரசித்தார்.
அதனைத் தொடர்ந்து நாமக்கல் மாவட்டம் சிலுவம்பட்டி ஊராட்சி அருந்ததியர் குடியிருப்புக்கு சென்று அங்குள்ள ஒரு வீட்டில் முதலமைச்சர் தேநீர் அருந்தினார்.
அரசின் திட்டங்கள் குறித்து அப்பகுதி மக்களிடம் கேட்டறிந்த முதலமைச்சர்,அருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டின் மூலம் உயர் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் மற்றும் அரசு பணியில் உள்ள இளைஞர்களிடமும் கலந்துரையாடினார்.