தற்காலிக ஆசிரியர் நியமனம் குறித்து புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை.
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் தன்னார்வலர்களாக பணியாற்றி வருபவர்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொண்டவர்கள், பள்ளிக்கு அருகே வசிப்பவர்கள், மாவட்டத்துக்குள் வசிப்பவர்கள் ஆகிய தகுதிகளின் அடிப்படையில் முன்னுரிமை வழங்கி பணி நியமனம் மேற்கொள்ள வேண்டும்.
காலிப் பணியிடங்களின் விவரங்கள் அனைத்தையும் இன்று அந்தந்த பள்ளி வாரியாக அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும் . தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் வரும் 4-ம் தேதி முதல் 6-ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். சரிபார்க்கப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தையும் 6ஆம் தேதி இரவு 8 மணிக்குள் பள்ளிக்கல்வித்துறை ஆணையருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட நியமனங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும் ஆசிரியரின் பணி திருப்தி அளிக்கவில்லை எனில், உடனடியாக பணியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்கலாம்: காலிப் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு இடைக்கால தடை! – நீதிமன்றம்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM