வேலூர் எம்பி கதிர் ஆனந்த், காட்பாடி மேம்பாலத்தை திறந்து வைப்பதற்கு முன்பாகவே, அதிமுக மாவட்ட செயலாளர் அப்பு திறந்து வைத்ததாக புகார் அளிக்கப்பட்டது.
வருவாய்த்துறை அளித்த இந்த புகாரின் பெயரில், மாவட்டச் செயலாளர் அப்பு கைது செய்யப்பட்டுள்ளார். அவர் கைது கண்டித்து உறவினர்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அதிமுக மாவட்ட செயலாளர் அப்பு மீது காட்பாடி போலீசார் 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அதிமுக மாவட்ட செயலாளர் அப்பு கைது செய்யப்பட்டதற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில், வேலூர் மாவட்டம்,காட்பாடியில் பழுதடைந்த ரயில்வே மேம்பாலத்தை சீரமைக்கும் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர், இச்சிரமங்களை அரசின் கவனத்திற்கு கொண்டு வரும் வகையில் நூதன முறையில் போராட்டம் நடத்திய வேலூர் மாநகர் மாவட்ட கழக செயலாளர் SRK.அப்பு அவர்கள் மீது, பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ள இந்த விடியா திமுக அரசின் அடக்குமுறை நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம்,காட்பாடியில் பழுதடைந்த ரயில்வே மேம்பாலத்தை சீரமைக்கும் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர், இச்சிரமங்களை அரசின் கவனத்திற்கு கொண்டு வரும் வகையில் நூதன முறையில் போராட்டம் நடத்திய,1/2
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) July 1, 2022