இலங்கைக்குத் தேவையான சகல உதவிகளையும் வழங்க தயார் என்று இலங்கைக்கான ஓமான் தூதுவர் அஹமட் அலி சஈத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவுடன் நேற்று (01) இடம்பெற்ற சந்திப்பின்போது அவர் இந்த உறுதிமொழியினை வழங்கினார். வலுசக்தி, காஸ், எரிபொருள், முதலீடு, தொழில்வாய்ப்பு ஆகிய துறைகளில் இருதரப்பிற்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறினார். தற்சமயம் ஓமானில் 25 ஆயிரம் இலங்கையர்கள் பணியாற்றி வருவதாகவும் திறன் அடிப்படையிலான தொழில் வாய்ப்புக்களுக்கு கூடுதலான சந்தர்ப்பங்களை வழங்குமாறு ஜனாதிபதி ஓமான் தூதுவரிடம் கோரிக்கை விடுத்தார்.