இலங்கைக்கு அரிசி கொண்டு செல்வதற்காக சிறிய ரக சரக்கு கப்பல் புதுச்சேரி துறைமுகத்திற்கு வந்துள்ளதாக இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
இந்நிலையில் புதுச்சேரி துறைமுகத்தில் இருந்து சிறிய ரக சரக்கு கப்பல்களை இயக்குவதற்காக துறைமுக முகத்துவாரம் தூர்வாரும் பணி தீவிரமாக நடைபெற்று வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..
இலங்கைக்கு அரிசி, உணவு, மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை ஏற்றுமதியும் பொருட்டு, தனியார் நிறுவனம் , சுமார் 500 தொன் சரக்குகளை கையாளக்கூடிய சிரிய ரக சரக்கு கப்பல் ஒன்றை புதுச்சேரி துறைமுகத்தில் நிறுத்தியுள்ளது.. இந்தக் கப்பலில் புதுச்சேரியில் இருந்து 300 தொன் அரிசியை இலங்கைக்கு எடுத்துச் செல்லத் திட்டமிடப்பட்டுள்ளதாக அந்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.