இலங்கைக்கு எரிவாயு விநியோகிப்பதில் இரு நிறுவனங்களுக்கு இடையில் கடும் நெருக்கடி


இலங்கைக்கு எரிவாயு விற்பனை செய்வது தொடர்பாக ஓமன் வர்த்தக நிறுவனத்திற்கும் தாய்லாந்தின் சியாம் எரிவாயு நிறுவனத்திற்கும் இடையில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்னிலங்கை ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து எரிவாயு நிறுவனங்களும் ஒரு மெட்ரிக் டன் எரிவாயுவை 96 டொலருக்கு வழங்க விருப்பம் தெரிவித்த நிலையில், ஓமன் டிரேடிங் நிறுவனம் 129 டொலருக்கு விலையை நிர்ணயித்துள்ளது.

இலங்கைக்கு எரிவாயு விநியோகிப்பதில் இரு நிறுவனங்களுக்கு இடையில் கடும் நெருக்கடி | Crisis Between Two Companies In Gas Supply

எரிவாயுவின் விலை மீண்டும் அதிகரிக்க வாய்ப்பு 

இதன் காரணமாக சியாம் எரிவாயு நிறுவனத்திற்கு எரிவாயு டெண்டரை மே மாதம் 3ம் திகதி வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஆனால் அதே நேரத்தில் டெண்டர் ரத்து செய்யப்பட்டு மீண்டும் ஓமன் டிரேடிங் நிறுவனத்திடம் டெண்டர் விடப்பட்டது.

இந்நிலையில், எரிவாயுவின் விலை மீண்டும் அதிகரிக்கும் என உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சியாம் காஸ் நிறுவனத்தின் எரிவாயு டெண்டர் ரத்து செய்யப்பட்டதன் பின்னணியில் அரசு அதிகாரி ஒருவரின் மகன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.