இலங்கையின் வரலாற்றில் முதல் முறையாக ஏற்பட்ட உச்சக்கட்ட அதிகரிப்பு


இலங்கையின் போக்குவரத்து வரலாற்றில் முதல் தடவையாக 4000 ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான பேருந்து பயணச்சீட்டு வழங்கப்படுகின்றது.

கொழும்பில் இருந்து காங்கேசன்துறைக்கான சொகுசு பேருந்து கட்டணத்தை 4450.00 ரூபா வரை அறவிட தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அனுமதி வழங்கியுள்ளது.

முதல் தடவையாக அதிகரித்த கட்டணம்

இலங்கையின் வரலாற்றில் முதல் முறையாக ஏற்பட்ட உச்சக்கட்ட அதிகரிப்பு | What Causes Fuel Crisis

இதற்கு முன்னர் இந்த நாட்டின் போக்குவரத்து வரலாற்றில் 4000 ரூபாவைத் தாண்டிய பேருந்து பயணச்சீட்டு இதுவரை வழங்கப்பட்டதில்லை.

இந்த கட்டணத்துடன் தொடர்புடைய பேருந்து சேவையை நடத்துவது சிரமமாக இருக்கும் என சம்பந்தப்பட்ட பேருந்து சேவைகள் ஏற்கனவே தெரிவித்துள்ளன.

நிவாரணம் வழங்க கோரிக்கை

இலங்கையின் வரலாற்றில் முதல் முறையாக ஏற்பட்ட உச்சக்கட்ட அதிகரிப்பு | What Causes Fuel Crisis

அதற்கு பதிலாக டீசல் கொடுப்பனவு ஒன்றை வழங்கி கட்டணத்தை குறைக்குமாறு சம்பந்தப்பட்ட பேருந்து நிறுவனங்களும் உரிமையாளர்களும் கோரிக்கை விடுத்துள்ளதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கதிர்காமம் – யாழ்ப்பாணம் பேருந்துக் கட்டணமானது இதுவரையில் அதிகபட்ச சராசரிக் கட்டணம் 2417 ரூபாயாக காணப்பட்டது.

கடந்த முதலாம் திகதி முதல் 2948 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதற்கைமய, இந்த கட்டணம் 3000.00 ரூபாயை நெருங்கியுள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.