உலக நாடுகளைப் பயமுறுத்தி வரும் பணவீக்கம் தற்போது இந்தியாவைப் பயமுறுத்தத் துவங்கியுள்ளது என்பது தான் உண்மை, ஆர்பிஐ சில வாரங்களுக்கு முன்பு மத்திய அரசிடமும் அறிவிக்காமல் ரெப்போ விகிதத்தை உயர்த்திய நாளில் இருந்து பணவீக்கம் குறித்த அச்சம் அரசுக்கும் சரி மக்களுக்கும் சரி அதிகரித்துள்ளது.
இந்தப் பயத்தை அதிகரிக்கும் விதமாக அமெரிக்காவில் பண பலம் படைத்த முன்னணி நிறுவனங்களாக டெஸ்லா, மெட்டா உட்படப் பல ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யும் போதும் இந்திய வர்த்தகச் சந்தையில் இருக்கும் நிறுவனங்களுக்குப் பீதியை அதிகரித்துள்ளது.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் இந்தியாவின் அண்டை நாடுகளாகப் பாகிஸ்தான் மற்றும் இலங்கையின் ஜூன் பணவீக்க தரவுகள் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
உலக வங்கியில் இந்தியா .915 பில்லியன் கடன் வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை, பாகிஸ்தான், நேபாள்
இலங்கை, பாகிஸ்தான், நேபாள் ஆகியவை பொருளாதாரச் சிக்கலில் சிக்கியது முதல் மோடி அரசு இந்தியாவின் நிதிநிலையே சரிபார்க்கும் பணிகளைத் துவங்கியது.
மத்திய அரசு
இதன் முதல் படி தான் கடந்த மாதம் நடந்த முக்கியமான கூட்டத்தில் ஒவ்வொரு மாநிலத்தின் நிதிநிலை, கடன், ஜிடிபி தரவுகளின் அப்டேட்களைத் திரட்டி எந்த மாநிலங்கள் அதிகப்படியான ஆபத்தில் இருக்கிறது என்பதைப் பட்டியலிட்டு வெளியிட்டது.
இலங்கை பணவீக்கம்
இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள தரவுகள் படி திவாலாகியிருக்கும் இலங்கை நாட்டின் ஜூன் பணவீக்கம் 54.6 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஐஎம்எப் இலங்கைக்குக் கடன் கொடுக்க விலைவாசி உயர்வு, ஊழல் குற்றங்கள் குறித்துக் கேள்வி எழுப்பிய இதே நாளில் தான் பணவீக்க தரவுகள் வெளியாகி அதிர்ச்சி கொடுத்துள்ளது.
கொழும்பு நுகர்வோர் விலை குறியீடு
வரலாற்றில் முதல் முறையாகக் கொழும்பு நுகர்வோர் விலை குறியீடு (CCPI) 50 சதவீதத்தைத் தாண்டி 54.6 சதவீதம் என்ற மோசமான நிலையை அடைந்துள்ளது. இன்றளவும் இலங்கை மக்கள் எரிபொருள், மின்சாரப் பற்றாக்குறையால் அதிகப்படியான தட்டுப்பாட்டை எதிர்கொண்டு வருகிறது.
பாகிஸ்தான் பணவீக்கம்
இதேபோல் பாகிஸ்தான் நாட்டின் ஜூன் பணவீக்கம் வெளியாகி கூடுதலான அதிர்ச்சியை அளித்துள்ளது, மே மாதம் 13.7 சதவீதமாக இருந்த பணவீக்கம் ஜூன் மாதத்தில் 21.3 சதவீதமாக உள்ளது. இது 2008 டிசம்பர் மாதத்தின் 23.3 சதவீத அளவீட்டை காட்டிலும் சற்று குறைவானது.
பாகிஸ்தான் டீ
பாகிஸ்தானில் கிராமப்புறத்தில் பணவீக்கம் 23.5 சதவீதமாகவும், நகரப்புறத்தில் 19.8 சதவீதமாகவும் உள்ளது. பாகிஸ்தான் அரசு தன் நாட்டின் அன்னிய செலாவணி இருப்பைக் காத்துக்கொள்ள மக்களை டீ குடிப்பதைக் குறைத்துக்கொள்ள அறிவித்துள்ளது அந்நாட்டு மக்களுக்கு மட்டும் அல்லாமல் உலக நாடுகளுக்கும் அதிர்ச்சி அளித்தது.
நேபாள் பணவீக்கம்
இதேபோல் நேபாள் நாட்டின் ஜூன் பணவீக்க தரவுகள் வெளிவராத நிலையில் மே மாதத்தில் 69 மாத உயர்வான 7.87 சதவீத அளவை எட்டியுள்ளது. கடந்த ஆண்டு இதே மே மாதம் நேபாள் நாட்டின் பணவீக்கம் 3.65 சதவீதமாக மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியா பணவீக்கம்
இந்தியாவின் மே மாத பணவீக்கம் 7.04 சதவீதமாக இருந்த நிலையில், ஜூன் மாத தரவுகள் இன்னும் வெளியாகவில்லை. ஆனால் ஜூன் மாதத்திற்கான உற்பத்தி PMI குறியீடு 53.9 புள்ளிகளாகக் குறைந்துள்ளது. இந்தச் சரிவு உற்பத்தி பொருட்களின் விலை உயர்வால் ஏற்பட்டது தான்.
Inflation Fear: Srilanka CPI rising to 54.6 percent, Pakistan stands at 21.3 percent; What is India Status?
Inflation Fear: Srilanka CPI rising to 54.6 percent, Pakistan stands at 21.3 percent; What is India Status? இலங்கை பணவீக்கம் 54.6%, பாகிஸ்தானில் 21.3%.. அப்போ இந்தியா..? ரெடியா இருங்க மக்களே!!