உக்ரைனில் போர் தாக்குதலில் இருந்து தப்பி கனடாவிற்கு வந்த மக்களை தமிழ்ப்பெண்ணான நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த வரவேற்றுள்ளார்.
உக்ரைனுக்குள் புகுந்த ரஷ்ய படையினர் கடந்த 4 மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இதையடுத்து உக்ரைன் மக்கள் பலர் அங்கிருந்து வெளியேறி வேறு நாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர்.
அந்த வகையில் உக்ரைனை சேர்ந்த மக்கள் ஒரு குழுவாக கனடாவிற்கு வந்த நிலையில் அவர்களை நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் வரவேற்றுள்ளார்.
Over the past months since Russia’s illegal invasion, Canada has stood shoulder to shoulder with Ukraine. Today I met with Ukrainian families who fled their home country and settled in Oakville. They prepared beautiful artwork and songs, and shared their incredible stories. pic.twitter.com/5lkp90vIOt
— Anita Anand (@AnitaAnandMP) July 2, 2022
அவரின் டுவிட்டர் பதிவில், ரஷ்யாவின் சட்டவிரோத ஆக்ரமிப்பு தொடரும் கடந்த நான்கு மாதங்களாக கனடா உக்ரைனுடன் தோளோடு தோள் நிற்கிறது.
இன்று நான் உக்ரேனிய குடும்பங்களைச் சந்தித்தேன், அவர்கள் தங்கள் சொந்த நாட்டை விட்டு வெளியேறி கனடாவில் ஓக்வில்லில் குடியேறினர்.
அவர்கள் அழகான கலைப்படைப்புகளையும் பாடல்களையும் தயார் செய்து, தங்களின் நம்பமுடியாத கதைகளை பகிர்ந்து கொண்டனர்.
எங்கள் உக்ரைனிய நண்பர்களை அன்புடன் வரவேற்கிறோம் என பதிவிட்டுள்ளார்.
Co-founded by John Hulak, Dean Marks & Peter Callahan, the Hearts4Ukraine initiative has provided assistance to over 55 Ukrainians who have settled in Halton Region. Thank you to the entire Hearts4Ukraine team for all that you do, and a very warm welcome to our Ukrainian friends.
— Anita Anand (@AnitaAnandMP) July 2, 2022