உக்ரைனுக்கு வான் இலக்குகளை தாக்கி அழிக்கும் இரு நவீன ஏவுகணை அமைப்புகள் உள்ளிட்ட ஆயுதங்களை வழங்குவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
நேட்டோ மாநாட்டில் மேலும் 820 மில்லியன் டாலர் மதிப்பிலான உதவிகளை உக்ரைனுக்கு வழங்குவதாக அமெரிக்க அதிபர் பைடன் அறிவித்தார்.
இந்நிலையில், ஆயுத தொகுப்பில் வான் இலக்கை தாக்கி அழிக்கும் NASAMS வகை ஏவுகணைகள், பீரங்கி எதிர்ப்பு ரேடார்கள், மற்றும் 15 மில்லி மீட்டர் பீரங்கி வெடிகுண்டுகள் என நவீன ஆயுதங்களை வழங்குவதாக அமெரிக்க ராணுவத் தலைமையகமான பெண்டகன் தெரிவித்துள்ளது