நாம் தினமும் பயன்படுத்தும் பொருட்கள் திருடு போவது என்பது எப்போதாவது நடைபெறும் ஒன்று.
அப்படி நாம் வைத்திருக்கும் கார் அல்லது இரண்டு சக்கர வாகனங்கள் தொலைந்து போனால், அதனுடைய அசல் சாவி இல்லாமல் காப்பீடு பணத்தைத் திரும்பப் பெற முடியாது என்று தெரியுமா உங்களுக்கு?
பொதுவாக மோட்டார் இன்சூரன்ஸ் வாகன திருடு மற்றும் உரிமையாளர் கவனக் குறைவு என இரண்டுக்கும் நன்மை அளிக்கும்.
பழைய கார், பைக்-ஐ எலக்ட்ரிக் வாகனங்களாக மாற்றுவது ஈசி.. எவ்வளவு செலவாகும் தெரியுமா..?!
ஆதாரம்
ஆனால் வாகன திருடு போகும் சூழலில் இரண்டு அசல் சாவிகளையும் அளிக்கும் போது அது வாகன உரிமையாளர் எந்த ஒரு மோசடியிலும் ஈடுபடவில்லை என்பதை உறுதி செய்யக்கூடிய முக்கிய ஆதாரமாக இருக்கும் என கூறப்படுகிறது.
போலி சாவி
இப்படி சாவியை சமர்ப்பிக்கும் போது போலி சாவியையோ, பிற கார்களின் சாவியையோ சமர்ப்பித்தாலும் வாகன உரிமையாளருக்குச் சிக்கலை ஏற்படுத்தும். எனவே சரியான முறையில் வாகனங்களின் சாவியை கையாள்வது எப்படி? என இங்கு பார்ப்போம்.
டூப்ளிகேட் சாவி
பொதுவாக ஒரு சாவியை மட்டுமே பயன்படுத்துவது நம்முடைய பழக்கமாக இருக்கும். எனவே ஒரு சாவி தொலைந்தோ? திருட்டோ அல்லது உடைந்து போனால் தான் நாம் இரண்டாம் சாவியை பயன்படுத்துவோம்.
உடைந்துவிட்டால்
சாவி உடைந்தோ, தேய்ந்து போனாலோ அதனையும் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும். இல்லை என்றால் இன்சூரன்ஸ் கிடைப்பதில் சிக்கல் தான்.
புகார்
இல்லை என்றால் சாவி தொலைந்துவிட்டது என்று காவல் நிலையத்தில் முதல் தரவு அறிக்கை பதிவு செய்ய வேண்டும். அதன்பின் டூப்ளிகேட் சாவிக்கு விண்ணப்பிக்கலாம். ஒருவேலை டூப்ளிகேட் சாவி வாங்கவில்லை என்றாலும் முதல் தரவு அறிக்கை போன்ற ஆவணங்கள் வாகனம் திருடு போகும் போது உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.
Did You Lost Your Vehicle? Your Claim May Reject If You Dont Have All The Keys
உங்கள் வாகனம் தொலைந்துவிட்டதா? சாவி இல்லையென்றால் இன்சூரன்ஸ் பணம் கிடைக்காது தெரியுமா? | Did You Lost Your Vehicle? Your Claim May Reject If You Dont Have All The Keys