இந்தியாவின் சுகாதாரம், தனியார் முதலீடு, குடியிருப்புத் துறை ஆகியவற்றிற்காக $1.915 பில்லியன் கடனை வழங்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியாவின் சுகாதாரம் மற்றும் முன்னேற்ற வளர்ச்சிக்காக உலக வங்கி கடன் கொடுத்துள்ளதை அடுத்து இந்த பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவுக்கு உலக வங்கி வழங்கும் மொத்த கடன் $1.915 பில்லியனில், தொற்றுநோய் எதிர்ப்புக்கான தயார்நிலை மற்றும் மேம்படுத்தப்பட்ட சுகாதார சேவை வழங்குதல், இந்தியாவின் சுகாதாரத் துறையை மேம்படுத்த செலவு செய்யப்படும்.
தங்க கடன் மட்டும் 1 லட்சம் கோடி.. திடீரென தங்க நகையை அடகு வைக்கும் மக்கள்.. ஏன்..?!
உலக வங்கி
உலக வங்கி வழங்கும் கடனில் $1 பில்லியன் கடன்கள் ஒவ்வொன்றும் $500 மில்லியன் இரண்டு கடன்களாக பிரிக்கப்பட்டுள்ளன. உலக வங்கி அறிக்கையின்படி, $1 பில்லியன் நிதியுதவியின் மூலம், நாடு முழுவதும் பொது சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்துவது, இந்தியாவின் முதன்மை திட்டமான பிரதான் மந்திரி-ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு இயக்கத்திற்கு ஆதரவளிப்பதற்காக வழங்கப்பட்டுள்ளது.
7 மாநிலங்கள்
மேலும் தேசிய அளவிலான கடனாக இருந்தாலும் இந்த பணம் ஆந்திரா, கேரளா, மேகாலயா, ஒடிசா, பஞ்சாப், தமிழ்நாடு மற்றும் உத்தரபிரதேசம் உள்ளிட்ட ஏழு மாநிலங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் செலவு செய்யப்படும்.
பொது சுகாதார அமைப்புகள்
அடுத்ததாக தொற்றுநோய்க்கான தயார் நிலைத் திட்டத்திற்கான பொது சுகாதார அமைப்புகள் (PHSPP) மற்றும் மேம்படுத்தப்பட்ட சுகாதார சேவை வழங்கல் திட்டம் (EHSDP), உலகளாவிய சுகாதார தரத்தை மேம்படுத்துவதற்கு பயன்படும்.
கோவிட்-19
கோவிட்- 19 பிரிவில் இந்தியாவில் சுகாதாரத் துறையின் செயல்திறனை மேம்படுத்துவதற்கான குறிப்பிடத்தக்க சீர்திருத்தங்கள் செய்வது இந்தியாவுக்கு அவசியம் என இந்தியாவுக்கான உலக வங்கியின் செயல் இயக்குநர் ஹிடேகி மோரி அவர்கள் தெரிவித்துள்ளார்.
வளர்ச்சி கொள்கை கடன்
மேலும், உள்கட்டமைப்பு, சிறு வணிகங்கள் மற்றும் பசுமை நிதிச் சந்தைகளில் தனியார் துறை முதலீட்டை மேம்படுத்துவதன் மூலம் நிதி இடைவெளிகளை நிவர்த்தி செய்வதில் முக்கியமான சீர்திருத்தங்களை ஆதரிப்பதற்காக, 750 மில்லியன் டாலர் வளர்ச்சிக் கொள்கைக் கடனாக (DPL) இந்தியாவுக்கு வழங்கப்படும் என ஹிடேகி மோரி தெரிவித்துள்ளார்.
ஹிடேகி மோரி
நாட்டின் முதலீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய திறமையான நிதி அமைப்பு, தொற்றுநோயிலிருந்து இந்தியா மீள்வதற்கும் அதன் வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கும் இந்த கடன் அவசியம் என்றும் ஹிடேகி மோரி தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை நாட்டின் வளர்ச்சி இலக்குகளை அடைய முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
கடன்
தனியார் நிதியுதவிக்காக, $750 மில்லியன் தொகையில் $667 மில்லியன் மறுகட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான சர்வதேச வங்கியின் (IBRD) கடனாகவும், $83 மில்லியன் உலக வங்கியின் சலுகையான சர்வதேச வளர்ச்சி சங்கத்தின் (IDA) கடனாகவும் வழங்கப்படும்.
18.5 ஆண்டுகள்
இந்த கடனை திருப்பி செலுத்துவதற்கான கால அவகாசம் 18.5 வருடங்கள் என்றும், அதன்பின்னர் கிரேஸ் காலமாக 5 வருடங்கள் எனவும் நிர்ணயம் செய்திருப்பதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
India gets loan from World Bank $1.92 billion for health and private financing!
India gets loan from World Bank $1.92 billion for health and private financing! | உலக வங்கியில் இந்தியா $1.915 பில்லியன் கடன் வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.